தமிழகத்தில் இன்று முதல் 11-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு…! மீனவர்களுக்கு எச்சரிக்கை இல்லை…!

rain 2025 2

தமிழகத்தில் இன்று முதல் 11-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதன் காரணமாக இன்று முதல் 11-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் வங்கக்கடல் பகுதிகளில் டிச.9-ம் தேதி வரை மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் இல்லை. தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் 9 செமீ, சென்னை ஒக்கியம் துரைபாக்கம், செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் தலா 7 செமீ,செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர், சென்னை புழலில் தலா 6 செமீ, சென்னை உத்தண்டி, திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் தலா 5 செமீ, நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, செங்குன்றம், கள்ளக்குறிச்சி மாவட்டம் திருப்பாலபந்தல், கடலூர் மாவட்டம் பெலாந்துறையில் தலா 4 செமீ மழை பதிவாகியுள்ளது.

Vignesh

Next Post

பள்ளி மாணவர்களுக்கு புதிய பாடப்புத்தக உருவாக்க பணி...! 26-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு...!

Sat Dec 6 , 2025
புதிய பாடப்புத்தக உருவாக்க பணியில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் டிசம்பர் 26-ம் வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: பள்ளி கல்விக்கான தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை – 2025-ன்படி மேற்கொள்ளப்படவுள்ள புதிய பாடப்புத்தக உருவாக்கப் பணிகளில் தன்னார்வத்துடன் பங்கேற்க விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து விருப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிப்பவர்கள், தொடர்புடைய பாடத்தில் உரிய கல்வித்தகுதி […]
school 2025 2

You May Like