சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.. அப்போது பேசிய அவர் “ கடந்த சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு இனி பாஜக உடன் கூட்டணி கிடையாது. அவர்கள் தான் தேர்தல் தோல்விக்கே காரணம் என்று அதிமுக.. ஆனால் இன்று எங்கள் ஆட்சியை காப்பாற்றியதே பாஜக. அதற்கு நன்றியோட இருப்போம் என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறார்.. இன்று மக்கள் அவரை எடப்பாடி பழனிசாமி என்று அழைப்பதில்லை.. முகமூடி பழனிசாமி.. அவர் தற்போது பாஜகவுக்கு நன்றி உடன் இருப்பேன் என்று கூறுகிறார்.. நன்றியை காட்ட யாராவது 4 கார் மாறி செல்வார்களா? அவருக்கு காரை மாற்றுவதும் காலை மாற்றுவதும் புதிதல்ல..
முதலில் ஜெயலலிதாவின் கால், பின்னர் அவர் இறந்த உடன் சசிகலாவின் கால், அவர் ஜெயிலுக்கு போன உடன் டிடிவி தினகரனின் கால், பின்னர் மோடியின் கால், தற்போது அமித்ஷாவின் கால், இடையே ஓபிஎஸ்ஸின் கால்.. இப்படி பல ஜோடி கால்களை மாற்றியவர் தான் எடப்பாடி பழனிசாமி..
அமித்ஷா பார்ப்பதற்காக டெல்லிக்கு சொல்லிட்டு போனார் எடப்பாடி பழனிசாமி.. ஆனால் ஹரித்வாருக்கு செல்வதாக கூறி திருட்டத்தனமாக அமித்ஷாவை சந்தித்தார் செங்கோட்டையன்.. நமது திமுகவின் தலைமை அலுவலகம் சென்னையில் இருக்கு.. நமக்கு ஏதாவது பிரச்சனை என்றால் அறிவாலயம் சென்று மனு கொடுப்போம்.. அதிமுகவின் தலைமை அலுவலகம் ராயப்பேட்டையில் உள்ளது.. அலுவலகம் மட்டும் தான் சென்னையில் உள்ளது.. ஆனால் அதிகாரம் டெல்லியில் இருக்கு.. எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு போகும் போது தைரியமாக சென்றுவிட்டார்..
ஆனால் திரும்பும் கார் மாறி, முகத்தை மறைத்துக் கொண்டு வருகிறார்.. கேட்டால் நான் முகத்தை மறைக்கவில்லை, வேர்த்துவிட்டது.. முகத்தை துடைத்தேன் என்று கூறுகிறார். அமித்ஷா வீட்டில் அப்படி என்ன சம்பவம் நடந்திருக்கும்.. பல லட்சம் மதிப்பு கொண்ட சொகுசு காரில் உங்களுக்கு வேர்க்கிறது என்றால், அப்படி என்ன நடந்திருக்கும்.. உங்களுக்கு முகம் வியர்க்கவில்லை.. கண் வியர்த்துவிட்டது..” என்று தெரிவித்தார்..
Read More : விஜய்யை முதலில் தனது காருக்கு Tax கட்ட சொல்லுங்க.. அப்புறம் ஊழல் பற்றி பேசலாம்.. எஸ்.வி.சேகர் கடும் தாக்கு!



