இந்த மாவட்டத்தில் எல்லாம் வறண்ட வானிலை நிலவக்கூடும்…! சென்னை வானிலை மையம் தகவல்…!

கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.


நாளை முதல் 12-ம் தேதி வரை வடதமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 25 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 முதல் 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 முதல் 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

Vignesh

Next Post

ஜாக்பாட்...! 14,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு...! தமிழக அரசு வெளியிட்ட குட் நியூஸ்...! முழு விவரம் இதோ....

Mon Jan 9 , 2023
பள்ளிக்கல்வித்துறையில் 14,019 தற்காலிக ஆசிரியர்களுக்கான மதிப்பூதியத்தை உயர்த்தப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில், 202-23 ஆம் கல்வி ஆண்டில் தொடக்க கல்வித்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள 4,989 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள், 5,154 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், 3,876 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் என்று 4,019 பணியிடங்களை நேரடி நியமனம் மற்றும் பதவி உயர்வு மூலம் நிரப்பும் வரை பள்ளி மேலாண்மை […]
அரசு ஊழியர்களுக்கு சூப்பர் நியூஸ்..!! தீபாவளி போனஸ் அறிவிப்பு..!! எவ்வளவு தெரியுமா..?

You May Like