ஏப்ரல் 4-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு…! மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதுமில்லை…!

தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென் இந்திய பகுதிகளில் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் வரும் 4-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


சென்னையை பொறுத்த வரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 34 முதல் 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு எந்த ஒரு எச்சரிக்கையும் இல்லை என தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

மாஸ் அறிவிப்பு...! ஆராய்ச்சி மாணவர்களுக்கு ரூ.10,000 உதவித் தொகை...! தமிழக அரசு தகவல்...!

Sat Apr 1 , 2023
ஆராய்ச்சித் துறையில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்கு மாணாக்கர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் -ரூ.10,000/- உதவித் தொகை வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. தமிழக மாணவர்களின் ஆராய்ச்சி திறமைகள் மற்றும் கண்டுபிடிப்புகளை மேம்படுத்த தமிழக அரசால் ஆராய்ச்சி ஊக்கத்தொகைத் திட்டம் தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலமைச்சருடன் நடைபெற்ற பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ஆலோசனை கூட்டத்தின் போது, மாணவர்களின் ஆராய்ச்சி திறமையை மேம்படுத்தவும், புதியக் கண்டுபிடிப்புகளைத் தமிழ்நாட்டில் ஊக்கப்படுத்தவும் முதலமைச்சரின் “ஆராய்ச்சி ஊக்கத்தொகைத் […]
Tn Goverment College school

You May Like