தொடர் பின்னடைவை சந்திக்கும் முதல்வர் ஸ்டாலின்..! கலக்கத்தில் திமுகவினர்..!

MK Stalin Campaign 2

தமிழ்நாட்டில் கடந்த 23-ம் தேதி 234 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.. இந்த தேர்தலில் ஆளும் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர் என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. 


காலை முதலே விஜய்யின் தவெக முன்னிலை வகித்து வருகிறது.. அதன்படி காலை 10 மணி நிலவரப்பட்டி தவெக 103 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.. அதிமுக 75 இடங்களிலும் திமுக 56 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது..

தமிழ்நாடு முழுவதும் 103 இடங்களில் விஜய்யின் தவெக முன்னிலை வகிக்கிறது.. இதன் மூலம் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுக்க உள்ளது.. தான் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் விஜய் முன்னிலை வகிக்கிறார்.. திருச்சி கிழக்கில் சுமார் 3000 வாக்கு வித்தியாசத்திலும், பெரம்பூர் தொகுதியில் சுமார் 8000 வாக்கு வித்தியாசத்திலும் விஜய் முன்னிலை வகிக்கிறார்..

மறுபுறம் திமுகவின் நட்சத்திர வேட்பாளர்கள் கடும் பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.. அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் சுமார் 6000 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்து வருகிறார்.. அதே போல் உதயநிதி ஸ்டாலினும் திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் தொகுதியில் பின்னடைவை சந்தித்து வருகிறார்.. மேலும் அமைச்சர்கள், கே.என்.நேரு, அன்பில் மகேஷ், கீதா ஜீவன், எ.வ. வேலு, துரைமுருகன் ஆகியோரும் பின்னடைவை சந்தித்து வருகின்றனர்..

RUPA

Next Post

தவெகவுக்கு 118 இடம் கிடைக்காவிட்டால் என்ன ஆகும்..? காத்திருக்கும் மெகா ட்விஸ்ட்.!

Mon May 4 , 2026
What will happen if TVK doesn't get 118 seats..? The mega twist waiting for you!
Vijay Stalin Eps 2025

You May Like