தேர்தல் களத்தில் முதல்வர் விஜய்..!! 2 நாட்கள் சூறாவளி பிரசாரம்..!! வெளியானது பயணத் திட்டம்..!!

vijay tvk

தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், மதுராந்தகம் தொகுதி தவெக வேட்பாளரை ஆதரித்துத் தமிழக முதல்வர் விஜய் 2 நாட்கள் தீவிரப் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.


இவ்விரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வேட்புமனுத் தாக்கல் கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி தொடங்கி 16-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் அக்டோபர் 9-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இக்களத்தில் தவெக, திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் நாம் தமிழர் கட்சி என 5 முனைப் போட்டி தீவிரமடைந்துள்ளது.

தவெக சார்பில் மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேலும், தாராபுரம் தொகுதியில் சத்யபாமாவும் வேட்பாளர்களாகக் களம் காண்கின்றனர். இந்நிலையில், கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய முதல்வர் விஜய் நேரடியாக களமிறங்கி வாக்கு சேகரிக்க திட்டமிட்டுள்ளார்.

அதன்படி, மதுராந்தகம் தொகுதியில் வரும் செப்டம்பர் 25-ஆம் தேதி அச்சரப்பாக்கத்தில் நடைபெறும் பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அவர் உரையாற்றுகிறார். தொடர்ந்து, அக்டோபர் 2-ஆம் தேதி மதுராந்தகம் தொகுதி முழுவதும் திறந்தநிலை வாகனத்தில் சென்றவாறு பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More : ஓட்டுக்கு ரூ.10,000..! திமுகவுக்கு டெபாசிட் காலி..! இரட்டை இலையும் விசிலும் ஒன்னு தான்..! எடப்பாடிக்கு அமைச்சர் ஆதவ் சவால்..!

Next Post

புதுமனை புகுவிழாவில் பசுவை வீட்டிற்குள் அழைத்துச் செல்வது ஏன்..? வாஸ்து சாஸ்திரம் சொல்லும் காரணம்..!

Sun Sep 20 , 2026
இந்து தர்மத்தில் பசு வெறும் கால்நடையாகக் கருதப்படாமல், சகல தெய்வங்களும் முப்பத்து முக்கோடி தேவ தேவதைகளும் வாசம் செய்யும் புண்ணிய வடிவமான ‘கோமாதா’வாகப் போற்றி வணங்கப்படுகிறது. வேதங்களின்படி, பசுவின் பாலில் சந்திர பகவானும், நெய்யில் அக்னி தேவனும் உறைந்திருப்பதாக சாஸ்திரங்கள் பகர்கின்றன. பசுவிடமிருந்து பெறப்படும் பால், தயிர், நெய், சாணம் மற்றும் கோமியம் ஆகிய ஐந்து புனிதப் பொருட்களின் கலவையே ‘பஞ்சகவ்யம்’ என அழைக்கப்படுகிறது. இது திருக்கோயில்களில் இறைவனின் அபிஷேகத்திற்குப் […]
Cow 2026

You May Like