ஓட்டுக்கு ரூ.10,000..! திமுகவுக்கு டெபாசிட் காலி..! இரட்டை இலையும் விசிலும் ஒன்னு தான்..! எடப்பாடிக்கு அமைச்சர் ஆதவ் சவால்..!

Aadhav Arjuna 2025

மதுராந்தகத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, திமுக – அதிமுகவை கடுமையாக சாடினார்.


அவர் பேசுகையில், “அமைச்சராகவோ அல்லது சட்டமன்ற உறுப்பினராகவோ பேசுவதை விட, தவெகவின் ஒரு சாதாரணத் தொண்டனாக மக்கள் மத்தியில் பேசுவதையே நான் பெருமையாக உணர்கிறேன். சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சினைகளைப் பேச எழுந்தாலே, அவை நெறிமுறை என்ற பெயரில் நம்மைப் பேச விடாமல் தடுக்கிறார்கள். திமுக 75 ஆண்டுகாலப் பாரம்பரியம் கொண்ட ஆலமரம் என்று தம்பட்டம் அடித்தார்கள். சட்டமன்றக் கூட்டத்தொடரின் முதல் நாளில் தங்களுக்கு மட்டுமே அரசியல் தெரியும் என்பதைப் போலக் கம்பீரமாக வந்தார்கள்; ஆனால், கூட்டத்தொடரின் கடைசி நாளில் எதிர்த்தரப்பில் அமர ஒரு ஆள் கூட இல்லை. முதல்வரைப் பேசுங்கள் என்று சவால் விடுத்துவிட்டு, அவர் பேச தொடங்கியதும் கூச்சலிட்டு வெளிநடப்பு செய்து ஓடிவிட்டார்கள்.”

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தவெக காணாமல் போய்விடும் என்று ஆரூடம் சொன்னவர்கள் அனைவரும் இன்று அரசியலை விட்டே காணாமல் போய்விட்டார்கள் என்று குறிப்பிட்ட அவர், “தவெகவின் இந்த இமாலய வெற்றியை இன்னும் திமுகவால் ஜீரணிக்க முடியவில்லை; தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். தேர்தல் தோல்விக்குப் பிறகு ஸ்டாலின் பொதுவெளியில் வர அஞ்சி, திருமண விழாக்களில் மட்டுமே பேசி வருகிறார். எதிரி யார் என்று கணிக்காமல் களமிறங்கிவிட்டோம் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி புலம்புகிறார். மறைந்த கருணாநிதியின் அரசியல் சாணக்கியத்தனத்தின் அருகில் வரக்கூடிய எந்தத் தகுதியும் வெறும் ஸ்டாலினின் மகனாகப் பிறந்துவிட்டதால் மட்டுமே உதயநிதிக்கு வந்துவிடாது. குறுக்கு வழியில் துணை முதல்வராகவும், தற்போது எதிர்க்கட்சித் தலைவராகவும் அமர்ந்து கொண்டு அவர் தவெகவை விமர்சிக்கிறார்” என்றார்.

“தவெகவை ஜென் ஸி (Gen Z) கட்சி, ரீல்ஸ் கட்சி, இன்ஸ்டாகிராம் கட்சி என்று தொடக்கத்தில் ஏளனம் பேசினார்கள். தலைவர் விஜயை பிரசாரம் செய்ய விடாமல் பல முட்டுக்கட்டைகள் போட்டபோதும், அதே இன்ஸ்டாகிராமை மட்டுமே ஆயுதமாக வைத்து திமுகவின் அதிகார ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார் எங்கள் முதல்வர். கடந்த திமுக ஆட்சியில் அரசு இயந்திரத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் ஊழல் தலைவிரித்தாடியது. அமைச்சர்கள், அவர்களின் குடும்பத்தினர், உதவியாளர்கள் என வரிசையாக லஞ்சம் வசூலிக்கும் அவலம் நீடித்தது.

நடந்து முடிந்த பொதுத்தேர்தலைப் போலவே, வரவிருக்கும் இடைத்தேர்தலிலும் தவெக ஒருபோதும் ஓட்டுக்கு ஒரு ரூபாய் கூடப் பணம் கொடுக்காது. ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் இழிவான கலாசாரத்தை மக்கள் துணையோடு அடியோடு ஒழிப்போம். தோல்வி பயத்தில் திமுகவினர் இந்த முறையும் தலா 5,000 ரூபாய் கொடுக்க வரலாம்; பொதுமக்கள் அந்தக் காசை வாங்கிக் கொண்டு தீபாவளிக்குப் புத்தாடை வாங்கிக் கொள்ளுங்கள், ஆனால் வாக்கை விசில் சின்னத்திற்கே செலுத்துங்கள். இந்த இடைத்தேர்தலில் திமுக தனது டெபாசிட்டையே இழக்கும்” என்றார்.

திமுக மற்றும் அதிமுக இடையே ரகசிய உடன்பாடு உள்ளதாகக் குற்றம்சாட்டிய அமைச்சர், “பெரம்பூர் பிரசாரத்தை முடித்துவிட்டு கொளத்தூரில் தலைவர் விஜய் வெறும் 5 நிமிடங்கள் மட்டுமே பேசினார்; அங்கே ஸ்டாலின் வீழ்த்தப்பட்டார். எடப்பாடி தொகுதியில் விசில் சின்னத்தில் வேட்பாளர் களமிறக்கப்பட்டிருந்தால், எடப்பாடி பழனிசாமியும் படுதோல்வியைச் சந்தித்திருப்பார். அங்கே உள்ளடி வேலைகள் மூலம் தப்பித்த இபிஎஸ்-க்குத் துணிவிருந்தால், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் இடைத்தேர்தலில் நிற்கட்டும்; விசில் சின்னத்தில் வேட்பாளரை நிறுத்தி அவரைத் தோற்கடித்துக் காட்டுகிறோம்” என்றார்.

“திமுகவும் அதிமுகவும் கள்ளக்கூட்டணி அமைத்துப் பேசுவதை அவர்களின் கூட்டணிக் கட்சிகளான விசிக, இடதுசாரிகள் மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகளே உணர்ந்து அம்பலப்படுத்தியுள்ளன. அதிமுக என்ற இயக்கம் தற்போது முற்றிலுமாகத் துடைத்தெறியப்பட்டுவிட்டது. மதுரையில் எம்ஜிஆரையும் பேரறிஞர் அண்ணாவையும் அரசியல் வழிகாட்டிகளாக விஜய் எப்போது ஏற்றுக்கொண்டாரோ, அப்போதே உண்மையான அதிமுகவாகத் தவெக பரிணமித்துவிட்டது.

திமுகவை வீழ்த்த விஜய் மட்டுமே சரியான ஆளுமை என்பதை உணர்ந்துதான், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசிகள் தவெகவுக்கு வாக்களித்தனர். அதன் காரணமாகவே கட்சிக்கு 35 சதவீத வாக்குகள் கிடைத்தன. இப்போது இரட்டை இலையும் விசிலும் ஒன்றாகிவிட்டன; தற்போது எஞ்சியிருப்பது சுயநல ‘எடப்பாடி அதிமுக’ மட்டுமே. சிஎம்டிஏ முதல் டாஸ்மாக் மற்றும் நெடுஞ்சாலைத்துறை வரை திமுக ஆட்சியில் முறைகேடுகள் நடந்ததை மறுக்க முடியுமா?” என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

Read More : என் தியாகத்திற்கு மார்க் போட உங்க எவனுக்கும் தகுதி இல்ல..! என்னை தோற்கடித்த கொளத்தூர் மக்களுக்கு நன்றி..! ஸ்டாலின் ஆவேசம்..!

Next Post

தேர்தல் களத்தில் முதல்வர் விஜய்..!! 2 நாட்கள் சூறாவளி பிரசாரம்..!! வெளியானது பயணத் திட்டம்..!!

Sat Sep 19 , 2026
தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், மதுராந்தகம் தொகுதி தவெக வேட்பாளரை ஆதரித்துத் தமிழக முதல்வர் விஜய் 2 நாட்கள் தீவிரப் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இவ்விரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வேட்புமனுத் தாக்கல் கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி தொடங்கி 16-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் அக்டோபர் 9-ஆம் தேதி […]
vijay tvk

You May Like