குழந்தைத் திருமணம்… 2026, மார்ச் 8-ம் தேதி வரை 100 நாள் நாடு முழுவதும்…! மத்திய அரசு முடிவு…!

Marriage 2025 1

குழந்தைத் திருமணம் இல்லாத நிலையை உருவாக்கும் வகையில் நாடு தழுவிய நூறு நாள் தீவிர விழிப்புணர்வு இயக்கம் டெல்லி விஞ்ஞான் பவனில் இன்று தொடங்கப்படுகிறது.


இந்தியாவில் குழந்தைத் திருமணம் இல்லாத நிலையை உருவாக்கும் வகையில் நாடு தழுவிய நூறு நாள் தீவிர விழிப்புணர்வு இயக்கம் டெல்லி விஞ்ஞான் பவனில் இன்று தொடங்கப்படுகிறது. குழந்தைத் திருமணம் இல்லாத இந்தியா இயக்கத்தின் ஓராண்டு காலத்தை குறிக்கும் வகையில் இதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தை மத்திய மகளிர் மற்றும் குழந்தை மேம்பாட்டு அமைச்சகம் 2024, நவம்பர் 27 அன்று தொடங்கி, 2025, நவம்பர் 27 அன்று நிறைவு செய்தது.

இந்த நூறு நாட்கள் தீவிர இயக்கத்தை மத்திய இணையமைச்சர் திருமதி சாவித்ரி தாக்கூர் முன்னிலையில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி அன்னப்பூர்ணா தேவி தொடங்கி வைக்கிறார்.குழந்தைத் திருமணத்தை ஒழிப்பதற்கான தேசிய உறுதிமொழி ஏற்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இந்நிகழ்ச்சியை https://webcast.gov.in/mwcd என்ற இணையதளம் மூலம் நேரடியாகக் காணலாம்.

இந்த நூறு நாள் இயக்கத்தில் முதல் கட்டமாக 2025, நவம்பர் 27 முதல், டிசம்பர் 31 வரை பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் விவாதங்கள், கட்டுரைப்போட்டி, உரையாடல் அமர்வு, உறுதிமொழி ஏற்பு உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறுகின்றன.மொத்தம் மூன்று கட்டங்களாக 2026, மார்ச் 8-ம் தேதி வரை இந்த நூறு நாள் விழிப்புணர்வு இயக்கம் நடைபெறுகிறது. இந்த தேசிய அளவிலான இயக்கம் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலம் மற்றும் பஞ்சாயத்து ராஜ், ஊரக மேம்பாடு மற்றும் கல்வி அமைச்சகத்துடன் இணைந்து நடைபெறவுள்ளது.

Vignesh

Next Post

அதிர்ச்சியில் CM ஸ்டாலின்..!! அதிமுகவில் இணைந்த திமுக மாணவர் அணியின் முக்கிய புள்ளி..!! குஷியில் எடப்பாடி பழனிசாமி..!!

Thu Dec 4 , 2025
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணிப் பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு மற்றும் உறுப்பினர் சேர்க்கை என தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன. இந்த முறை தேர்தலை எதிர்கொள்ள அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில், மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சிக்குள் இழுக்கும் பணியில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இதற்கிடையே, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சிக்கு எதிராகச் செயல்படும் நிர்வாகிகளை நீக்கிவரும் […]
Stalin EPS 2025

You May Like