சந்தேகத்திற்கிடமான முறையில் பறந்த சீன ட்ரோன்!… போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு!… BSF படை அதிரடி!

Chinese drone: பஞ்சாப் பெரோஸ்பூர் மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் ஹெராயின் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற சீன ட்ரோனை பிஎஸ்எஃப் படையினர் மீட்டுள்ளனர்.

பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் ஒரு ஆளில்லா விமானம் பறப்பதாக பிஎஸ்எஃப் புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற BSF படையினர், தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, 2.710 கிலோ எடையுள்ள சந்தேகத்திற்கிடமான 3 ஹெராயின் பாக்கெட்டுகளுடன் ஒரு ட்ரோன் வெற்றிகரமாக மீட்கப்பட்டது. ஜாங்கிர் சிங் கி தானி கிராமத்தை ஒட்டியுள்ள விவசாய வயலில் சிறிய டார்ச் மற்றும் ஒளிரும் பச்சை நிற சிறிய பந்தும் இணைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, மீட்கப்பட்ட ட்ரோன், சீனாவில் தயாரிக்கப்பட்ட DJI Matrix 300 RTK என அடையாளம் காணப்பட்டுள்ளது. BSF படையினரின் அதிரடி நடவடிக்கையால் போதைப்பொருள் கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது.

Readmore: இன்று மீனாட்சி – சுந்தரேஸ்வரருக்கு திருக்கல்யாணம்!… திருத்தேரின் சிறப்புகளும் சுவாரஸ்யங்களும்!

Kokila

Next Post

சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு

Sun Apr 21 , 2024
சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு ஏப்ரல் 22, 23 ஆகிய தேதிகளில் திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. பெளர்ணமியின்போது திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு கிரிவலம் சென்றால் புண்ணியம் கிடைக்கும் என்று சொல்வார்கள். அதன்படி, ஒவ்வொரு பெளர்மணி அன்றும் ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு செல்வார்கள்.எனவே பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்து […]

You May Like