சமீபகாலமாகவே சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் அனைத்தும் டிஆர்பி அளவில் வேகமாக சென்று கொண்டிருக்கிறது.ஆனால் டிஆர்பியை கடந்து அந்த தொடர்களின் விமர்சனத்தை பார்த்தால் ரசிகர்கள் அனைவரும் கழுவி, கழுவி ஊத்தும் விதமாகவே இருக்கிறது.
தற்போதைய இளம் தலைமுறையினர் இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நெடுந்தொடர்களை பார்த்துவிட்டு முன்வைக்கும் விமர்சனங்கள் ரசிக்கும்படியாகவே இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.
அந்த வகையில், சன் தொலைக்காட்சியில் பெண்களை மையப்படுத்தி பல வெற்றிகரமான தொடர்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில், தற்போது கயல், எதிர்நீச்சல் உள்ளிட்ட நெடுந்தொடர்கள் பெண்களை மையப்படுத்தி சென்று கொண்டிருக்கிறது டிஆர்பிஐ பொறுத்தவரையில் கயல் நெடுந்தொடர் முதலிடத்தில் இருந்தாலும், எதிர்நீச்சல் நெடுந்தொடர் மக்களின் மனதில் நன்றாக பதிந்திருக்கிறது. ஒவ்வொரு நாளும் இந்த நெடுந் தொடரில் வெளியாகும் காட்சிகள் தொடர்பாக சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில், இந்த நெடுந்தொடரில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை பிரியதர்ஷினி. இவருக்கு இந்த நெடுந்தொடர் மூலமாக ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்திருக்கிறது. இவர் விஜய் தொலைக்காட்சியிலும் நம்ம வீட்டு பிள்ளை தொடரில் நடித்து வந்தார். தற்சமயம் இந்த தொடரில் இருந்து அவர் வெளியேறி விட்டார். ஆனாலும் அவர் எதிர்நீச்சல் தொடரிலிருந்து விலகி விட்டார். என்று தவறான தகவல் வெளியானதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.