கடந்த 1981 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படமான அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தின் மூலமாக பாரதிராஜாவால் தமிழ் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டவர் நடிகை ராதா.
இந்த திரைப்படத்திற்கு பிறகு அப்போதைய காலகட்டத்தில் முன்னணி நடிகர்களாக இருந்த ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த், சிவாஜி, சத்யராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்தார் நடிகை ராதா.
மேலும் அப்போதைய காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத நடிகையாகவும் திகழ்ந்தார்.
இதனைத் தொடர்ந்து, கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியான innathe program என்ற மலையாள திரைப்படத்திற்கு பின்னர் அவர் சினிமாவில் இருந்து விலகினார். இதன் பிறகு இவருடைய மகள்களான கார்த்திகா மற்றும் துளசி உள்ளிட்ட எறிவரும் நடிகையாக அறிமுகமானார்கள். ஆனால் முன்னணி நடிகையின் மகள்களாக இருந்தும் இருவருக்குமே தமிழ் சினிமா எதிர்பார்த்த வரவேற்பை வழங்கவில்லை. ரசிகர்கள் மத்தியிலும் அவர்களுக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.
இந்த நிலையில் தான் நடிகை ராதா தன்னுடைய தாயுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை முதல்முறையாக வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் ராதாவின் தாய், நடிகை ராதா மற்றும் ராதாவின் மகள் கார்த்திகா உள்ளிட்டோர் இருக்கிறார்கள்.