இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் திரைப்படத்தில் நடிகை அதிதி சங்கர் பத்திரிகையாளராக நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டாக்டர், டான் திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் ‘மாவீரன்’. விருமன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமான அதிதி சங்கர், அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். மண்டேலா பட இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கும் இப்படத்தில் இயக்குநர் மிஷ்கின் வில்லனாக நடிக்கிறார். சரிதா மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
![சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்கும் அதிதி சங்கர்..! என்ன கதாபாத்திரம் தெரியுமா?](https://1newsnation.com/wp-content/uploads/2022/09/Aditi-Shankar-1.jpg)
இதற்கான அறிவிப்பை படக்குழுவினர் முன்னதாக அறிவித்த நிலையில், இப்படத்தில் இருந்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில், நடிகை அதிதி சங்கர் இந்த படத்தில் செய்தி நிறுவனத்தில் பணியாற்றும் பத்திரிகையாளர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், 2ஆம் கட்ட படப்பிடிப்பு சென்னை சுற்றி வட்டார பகுதியில் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.