கடந்த 11ஆம் தேதி அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படமும், விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படமும் மிகப்பெரிய ஹிட்டாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
அதிலும் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் மக்கள் மனதில் மிகப்பெரிய இடத்தை பிடித்து விட்டதாக சொல்லப்படுகிறது.
அதே நேரம் விஜய் நடித்து வெளியான வாரிசு திரைப்படம் குடும்ப கதை ரசிகர்களின் மனதில் மாபெரும் இடத்தை பெற்று இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
சமூகத்திற்கு தேவையான வங்கி தொடர்பான சில விஷயங்களை துணிவு திரைப்படத்தில் அற்புதமாக காட்டியிருக்கிறார்கள்.
ஆகவே இந்த திரைப்படமும் வசூலில் சாதனை படைத்திருக்கிறது. இந்த திரைப்படம் முதல் நாளிலிருந்து தமிழகத்தில் வசூலில் முதலிடத்தை பிடித்திருக்கிறது.
அதேநேரம் இனி வரும் காலங்களில் இந்த படத்திற்கு இன்னும் நல்ல வசூல் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
இந்த திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் 11-ம் தேதி வெளியாக இருந்தது. 7️ நாட்கள் முடிவடைந்த நிலையில், இந்த திரைப்படம் மற்றும் மொத்தமாக உலகம் முழுவதும் 150 கோடி வரையில் வசூலித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.