ஹச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் கடந்த 11ஆம் தேதி அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் துணிவு.
இந்த திரைப்படம் தமிழகம் முழுவதும் ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தை காண்பதற்கு டிக்கெட் கிடைக்காமல் பலர் போராடி வருகிறார்கள். இந்த திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தமிழகத்தில் விநியோகம் செய்திருக்கிறது. இந்த திரைப்படம் அதிக திரையரங்குகளை பெற்றிருக்கிறது.
மேலும் தமிழகத்தில் முதல் நாளில் 20 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது துணிவு திரைப்படம்.
இந்த நிலையில் தான் தமிழகத்தில் ஒரு மாவட்டத்தில் மட்டும் அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்பட ஷோ ஆள் இல்லாமல் இரத்தான செய்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது கரூரை அடுத்துள்ள அரவக்குறிச்சி பகுதியில் தான் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்று உள்ளது.
அந்தத் திரைப்படத்திற்கான அதிகாலை 1 மணி மற்றும் 4 மணி காட்சிகள் ஹவுஸ் ஃபுல் ஆக இருந்தது ஆனால் அடுத்ததாக திரையிடப்பட்ட 7 மணி காட்சிக்கு ஒட்டுமொத்தமாக 17 பேர் மட்டுமே டிக்கெட் பெற்று இருந்தார்கள்.
அதன் காரணமாக, இந்த திரையரங்க நிர்வாகம் அந்த காட்சியை ரத்து செய்து இருக்கிறது.