உருவாகி இருக்கும் திரைப்படம் துணிவு இந்த திரைப்படம் பொங்கல் சமயத்தில் வெளியாக இருக்கிறது. விஜய் படமும் அஜித் திரைப்படமும் ஒரே நேரத்தில் வெளியாக இருக்கிறது. ஆகவே ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில், துணிவு திரைப்படத்தின் படபிடிப்பை முடித்துவிட்டு நடிகர் அஜித்குமார் அதன் பிறகு பைக் ரெய்டு மற்றும் தன்னுடைய குடும்பத்தினருடன் தன்னுடைய நேரத்தை செலவு செய்து வருகிறார்.
ஆனால் துணிவு திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிக்கு அஜித்குமார் வருவார் என்று செய்திகள் பரவ தொடங்கியது. இந்த நிலையில் தான் நல்ல படத்திற்கு அதுவே விளம்பரம் என்று தெரிவித்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் அஜித்குமார்.
தற்சமயம் அஜித்குமார் புத்தாண்டை குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்ந்த புகைப்படங்கள் வெளியாகி, வைரலாகி வருகிறது. இந்த சூழ்நிலையில்தான் நடிகர் அஜித்குமார் அடுத்ததாக விக்னேஷ் சிவனுடன் கூட்டணியமைத்து அவருடைய 62 வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்தின் படபிடிப்பு எப்போது ஆரம்பமாகும்? என்ற தகவல் வெளியாக இருக்கிறது. வரும் ஜனவரி மாதம் 17ஆம் தேதி இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு ஆரம்பித்து 4 மாதங்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தி முடிக்க திட்டமிட்டு உள்ளாராம்.
இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என சொல்லப்படுகிறது. அந்த விதத்தில் தான் இந்த திரைப்படத்திற்கான அனைத்து பணிகளும் செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.