வேட்டையாடு விளையாடு – 2 படம் குறித்து இயக்குநர் கௌதம் மேனன் முக்கிய அப்டேட் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
கௌதம் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து கடந்த 2006ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ”வேட்டையாடு விளையாடு”. இப்படம் கமல் ரசிகர்களிடையே மறக்க முடியாத படமாக இருந்து வருகிறது. தற்போது, லோகேஷ் எப்படி ஒரு கமல் ரசிகராக ரசித்து ரசித்து விக்ரம் படத்தை உருவாக்கியிருந்தாரோ அதற்கு சற்றும் குறைவில்லாமல் கமல்ஹாசனை மிக நேர்த்தியாக காட்டியிருப்பார் இயக்குநர் கௌதம் மேனன்.
குறிப்பாக, இந்தப் படத்தில் “கண்ணு வேணும்னு கேட்டியாமே” என கமல் பேசும் காட்சிக்கு திரையரங்குகளில் விசில் பறந்தது. சமீபத்தில் லோகேஷின் விக்ரம் திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றியைப் பதிவு செய்தது. தற்போது இந்தியன் 2 படமும் உருவாகிவருவதால் வேட்டையாடு விளையாடு – 2 படம் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் வேட்டையாடு விளையாடு – 2 குறித்து இயக்குநர் கௌதம் மேனன் முக்கிய அப்டேட் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ஏற்கனவே வேட்டையாடு விளையாடு-2 படத்துக்கான கதையை 120 பக்கம் வரை எழுதிவிட்டேன்.. கடைசி அரை மணி நேரத்தை செதுக்கிக் கொண்டு இருக்கிறேன். கமல்ஹாசன் ஒப்புக்கொள்வாரா என தெரியவில்லை. வேட்டையாடு விளையாடு – 2 படத்தை எனது அடுத்தப்படமாக எதிர்பார்த்து காத்திருக்கிறேன்” என்று தெரிவித்தார்.