fbpx

’விடுதலை’ படத்தில் இத்தனை கெட்டவார்த்தைகளா..? லிஸ்ட் போட்டு தூக்கிய சென்சார் போர்டு..!!

தமிழ் சினிமாவின் தலைசிறந்த இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் வெற்றிமாறன். இவர் இயக்கிய பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் ஆகிய 5 திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இவர் இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் தான் விடுதலை. இப்படத்தை இரண்டு பாகங்களாக எடுத்து முடித்துள்ளார் வெற்றிமாறன். இப்படத்தின் முதல் பாகம் மார்ச் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஜெயமோகன் எழுதிய துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படத்தை எடுக்கப்பட்டுள்ளது. விடுதலை படத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து உள்ளார். எல்ரெட் குமார் இப்படத்தை பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்துள்ளார்.

விடுதலை படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால், அப்படத்திற்கான புரமோஷனும் ஒருபக்கம் படு ஜோராக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விடுதலை படத்தில் சென்சார் போர்டு அதிகாரிகள் கத்திரி போட்ட காட்சிகளின் விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளன. அதன்படி, 11 இடங்களில் கெட்ட வார்த்தைகளுக்கு மியூட் செய்துள்ளதாகவும், 2 இடங்களில் இடம்பெற்றிருந்த நிர்வாண காட்சிகளிலும் சென்சார் போர்டு கைவைத்துள்ளதாம். காது கொடுத்து கேட்க முடியாத அளவுக்கு இருக்கும் அந்த கெட்ட வார்த்தைகளின் விவரங்களையும் சென்சார் சான்றிதழில் குறிப்பிட்டுள்ளனர். இதன்மூலம் வட சென்னை போல இதுவும் ராவான படமாக இருக்கும் என தெரிகிறது.

’விடுதலை’ படத்தில் இத்தனை கெட்டவார்த்தைகளா..? லிஸ்ட் போட்டு தூக்கிய சென்சார் போர்டு..!!

Chella

Next Post

பள்ளி மாணவிக்கு பக்கா ஸ்கெட்ச்..!! தனிமையில் உல்லாசம்..!! சாக்கு மூட்டையில் கிடந்த சடலம்..!!

Tue Mar 28 , 2023
புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் பொறையூரை சேர்ந்த பழனி என்பவரின் மகன் பிரதீஷ் (23). இவர் அப்பகுதியில் பழக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அப்போது பேருந்தில் பள்ளிக்கு செல்லும் 17 வயது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. அவரை காதலித்து கல்யாணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி நெருங்கி பழகி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2021 ஏப்ரல் மாதம் மாணவியை வில்லியனூர் பகுதியிலிருந்து பொறையூரில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று தனிமையில் […]

You May Like