விஜய்டிவில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் நடிகைக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.
ராஜா ராணி முதல் பாகத்தில் அறிமுகமானவர் ரித்திகா. அந்த நாடகத்திற்கு பின்னர்இவர் வேறு எந்த நாடகத்திலும் நடிக்கவில்லை. நீண்ட காலத்திற்கு பின்னர் குக்வித் கோமாளியில் குக்காக வந்தார். அதைத் தொடர்ந்து பாக்கியலட்சுமி சீரியலில் எழிலை காதலிக்கும் அமிர்தாவாக நடித்து வருகின்றார். இந்த நாடகத்திற்கு பின்னர்இவருக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வருகின்றது.
சிவாமனசுல சக்தி, சாக்கோலேட்,திருமகள் என 2018ல் திரைப்படங்கள் நடித்துள்ளார். தற்பேது சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி உள்ளார். தொகுப்பாளினியாகவும் களம் இறங்கி உள்ள இவர் ஒரு பல்திறமைகள் கொண்ட நடிகை. நடனம், பாடல்கள், என கலக்கி வருகின்றார். 4ஜி என்ற குறும்படத்தில் நடித்துள்ளார். தனியாக யூடியூபும் நடத்தி வருகின்றார்.
இவருக்கு விரைவில் திருமணமாக உள்ளதாக சின்னத்திரை வட்டாரங்கள் பரபப்பாக பேசி வருகின்றனர். விஜய்டிவியில் பணியாற்றும் வினு என்பவரைத்தான் திருமணம் செய்ய உள்ளதாகவும் திருமண பத்திரிகையும் வெளியாகி உள்ளது.
நவம்பர் 27ம் தேதி மாலை இவர்களின் குடும்பத்தினர் நண்பர்கள் முன்னிலையில் திருமணமாக உள்ளது. வினு என்பவர் விஜய்டிவியில் கிரியேட்டிவ் டைரக்டராக பணியாற்றி வருகின்றார். இருவரும்ஒரே தொலைக்காட்சியில் பணியாற்றி வருவதால் இருவரும் காதலித்து பின்னர் இரு வீட்டார் சம்மதம் பெற்று திருமணம் செய்ய உள்ளனர்.