பிக்பாஸ் அசீம் குறித்து நடிகை சுபத்ரா பேசிய கூறிய கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் வீட்டில் ஆரம்பம் முதலே அடாவடியாகவும், அதிகாரத்தை செலுத்தும் போக்குடனும் நடந்து கொண்டு வருகிறார் அசீம். குறிப்பாக, பெண் போட்டியாளர்களை மட்டம் தட்டி பேசுவதும், ஆண் போட்டியாளர்களிடம் திமிராக தள்ளுமுள்ளு சண்டையிட்டு ஒடுக்குவதையும் தொடர்ந்து செய்து வருகிறார். இந்த வாரத்தில் கூட அமுதவாணனை கண்ணத்தில் அடித்ததாக புகார் எழுந்தது. இந்நிலையில், நடிகை சுபத்ரா அளித்துள்ள பேட்டியில், அசீம் குறித்து கூறிய கருத்துகள் தற்போது வைரலாகி வருகிறது. சுபத்ரா ‘பூவே உனக்காக’ சீரியலில் அசீமுடன் இணைந்து நடித்திருந்தார்.
![BB Tamil..!! பிக்பாஸ் அசீம் இப்படிபட்டவரா..? நம்பவே முடியல..!! நடிகை சுபத்ரா ஓபன் டாக்..!!](https://1newsnation.com/wp-content/uploads/2022/12/NTLRG_20221203114341371571.jpg)
அப்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் அசீமுக்கும் ஹீரோயினுக்கும் ஒருமுறை பயங்கர சண்டை நடந்ததாகவும் அதற்கு பின் தேவிப்பிரியாவுடனும் அசீம் சண்டையிட்டதாகவும் கூறியுள்ளார். மேலும், அவருக்கு முன்னால் யார் கைநீட்டி பேசினாலும் கோபாமாகிவிடுவார், சண்டை போடுவார். இப்போது பிக்பாஸ் வீட்டில் அவர் எப்படியிருக்கிறாரோ அதுதான் அவரது உண்மையான முகம் என்றும் கூறியுள்ளார். முன்னதாக அசீமின் சக நடிகரான அருண் ராஜனும் அசீம் குறித்து இதே கருத்துகளை கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.