நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத்-க்கு அடுத்த சிக்கல்.. உயர்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்..

சின்னத்திரை பிரபலம் சித்ரா கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்… அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில், சித்ராவின் மரணத்திற்கு தற்கொலை தான் காரணம் என்று உடற்கூறாய்வு அறிக்கை கூறுகிறது. ஆனால் சித்ராவின் பெற்றோர் மற்றும் நண்பர்கள் அதில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்..

சித்ரா

இதையடுத்து தற்கொலைக்கு தூண்டிய குற்றச்சாட்டில் சித்ராவின் கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டார்.. பின்னர் கடந்த ஆண்டு அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.. இதனிடையே தங்கள் மகளின் தற்கொலைக்கு ஹேம்நாத் தான் காரணம் என்று சித்ராவின் பெற்றோர் குற்றம்சாட்டுகின்றனர்.. ஆனால் சித்ராவின் மரணத்தில் அரசியல் புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் ஹேம்நாத் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.. மேலும் ஹேம்நாத் உள்ளிட்டோர் மீது காவல்துறை பதிவு செய்த வழக்கில் தன் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய கோரி ஹேம்நாத் வழக்கு தொடர்ந்தார்..

இந்நிலையில் நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் ஜாமீனை ரத்து செய்ய கோரி, நண்பர் சையத் ரோஹித் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.. சித்ராவிற்கு கணவர் ஹேம்நாத் தந்த தொல்லை குறித்து சாட்சி அளித்ததால் கொலை மிரட்டல் வருவதாகவும் தனது மனுவில் சையது குறிப்பிட்டுள்ளார்.. தன்னை மிரட்டுவதுடன் வெளியே சுதந்திரமாக நடமாடுவதால் சாட்சிகளை ஹேம்நாத் கலைப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.. எனவே ஹேம்நாத் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்..

முன்னதாக இந்த மாதத்தின் தொடக்கத்தில் ஹேம்நாத் மீதான வழக்கை ரத்து செய்யக் கூடாது என்று சித்ராவின் தந்தை காமராஜ் உயர்நீதிமன்றத்தில் பதில் மனு அளித்திருந்தார்.. மேலும் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஹேம்நாத் தனது மகள் சித்ராவை சித்ரவதை செய்ததாகவும் காமராஜ் தெரிவித்திருந்தார்.. எனவே ஹேம்நாத் மீதான வழக்கை ரத்து கூடாது என்றும் சித்ராவின் தந்தை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..

Maha

Next Post

ஆபாச படம் பார்க்கச் சொல்லி மனைவிக்கு சிகரெட்டால் சூடு வைத்த கணவன்..!

Wed Jul 20 , 2022
பெங்களூரு பானசாவடி பகுதியில் வசித்து வருபவர் பிரதீப்(27). இவர் நித்யா என்ற பெண்ணை காதலித்து கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பிரதீப் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவி நித்யாவிடம் தகராறு செய்ததுடன் அவரை அடித்து, உதைத்துள்ளார். மேலும் அவரது செல்போனில் ஆபாச வீடியோவை பார்க்கும்படி நித்யாவுக்கு, பிரதீப் தொல்லை கொடுத்து வந்ததுள்ளார். ஆனால் செல்போனில் ஆபாச படம் பார்க்க நித்யா […]

You May Like