பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர் ஷிவின் கணேசன் தனது காதலன் குறித்து முதல்முறையாக கண் கலங்கி பேசியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள ஷிவின் கணேசன், மற்ற போட்டியாளர்களை போல, ஏனோ தானோ என்று விளையாடாமல் விளையாட்டை புரிந்து கொண்டு விளையாடி வருகிறார். பொம்மை டாஸ்கின் போது அசீம், ஷிவினை மோசமாக இமிடேட் செய்து கிண்டலடித்த போதும் இவர், அதைப்பற்றி கண்டுகொள்ளாமல் அமைதியாகவே இருந்தார். இதனால், கமல்ஹாசனே இவரை பாராட்டினார். பிக்பாஸ் வீட்டில் உருவாகி உள்ள மினி அன்பு டீமில் ஷிவின் மற்றும் ரச்சிதா மகாலட்சுமி இருக்கிறார்கள். இருவருமே ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நட்புடன் பழகி வருகின்றனர். அந்த வகையில், ஷிவின் தனது வாழ்க்கையில் வந்த காதல் அனுபவம் குறித்தும், தனது காதலன் குறித்தும் கண்கலங்கி பேசியுள்ளார்.

நான் ஐடியில் வேலை பார்க்கும் போது ஒருவருடன் நட்பாக பழகினேன். நாளடைவில் அது காதலாக மாறிவிட்டது. எங்களது காதல் எந்தவிதமான பிரச்சனையும் இல்லாமல் நன்றாகத்தான் போய் கொண்டிருந்தது. நான் காதலிப்பதை அம்மா கண்டுபிடித்து கேட்டார். இதெல்லாம் வேணாம், அவங்க குடும்பத்திற்கு உன்னைப் பற்றி விஷயம் தெரிந்தால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அந்த குடும்பத்தின் சாபம் நமக்கு எதுக்கு வேண்டாம் என்று அம்மா அட்வைஸ் கொடுத்தாங்க. அம்மா சொன்னதை யோசிச்சு அவர் கிட்ட சொன்னேன். இனி நாம பேச வேணாம், உனக்கு நல்ல வாழ்க்கை இருக்கு அந்த வாழ்க்கையை வாழு என்று சொல்லிவிட்டு பிரிந்துவிட்டேன். அதன் பிறகு பலமுறை அவர் பேச முயற்சி செய்தார். ஆனால், நான் பேசவில்லை.

இப்போ அவர் சிங்கப்பூரில் இருக்கிறார். இப்போ அவர் கெட்ட பழக்கம் வச்சிருக்கிறாரு என்ற கேள்விப்பட்டேன். இருந்தாலும் என்ன பண்ண முடியும் அவரோட வாழ்க்கை நல்லா இருக்கணும், நல்ல பொண்ணு அவருக்கு கிடைச்சா சந்தோஷமாக இருந்தா உண்மையில் நான் ரொம்ப சந்தோஷப்படுவேன். ஆனால், அவரை மறந்திட்டு வாழுறது கஷ்டம் தான் என்று தனது காதலன் குறித்து கண்கலங்கி பேசியுள்ளார் ஷிவின் கணேஷன்.