பிரபல நடிகர் விஜய் அவர்கள் நடிப்பில் உருவாகி இருக்கும் வாரிசு திரைப்படம் பொங்கலின் போது வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. அதேபோல அஜித்குமார் நடிக்கும் துணிவு திரைப்படமும் பொங்கலின் போது வெளியாக உள்ளது. திரையரங்குகளை பிடிக்கும் முயற்சியில் தயாரிப்பாளர்கள் இறங்கி உள்ளார்கள்.
இந்த நிலையில் தான் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மறுநாள் மாலை 4 மணி அளவில் ஆரம்பிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
2 வருடங்களுக்குப் பின்னர் விஜய் திரைப்பட விழாவில் பங்கேற்றுக் கொள்ள இருக்கிறார் என்பதால், அவருடைய ரசிகர்கள் அவரை காண்பதற்கு ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். அதோடு, விஜய் அரசியல் பேசுவாரா? என்னவிதமான குட்டி கதை சொல்லப் போகிறார்? என்றெல்லாம் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது.
ஆனால் தற்சமயம் ஒரு பிரச்சனை ஏழத்தொடங்கி இருக்கிறது அதாவது, புது விதமான கொரோனா வைரஸ் சீனாவில் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் அந்த வைரஸ் பரவத் தொடங்கி இருக்கின்ற சூழ்நிலையில், தற்போது கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் பரிசீலனையில் இருப்பதாக தகவல் கிடைத்து இருக்கிறது. இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால் வாரிசு திரைப்பட இசை வெளியீட்டு விழா குறித்த நாளில் நடைபெறுமா? என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது.