விஜய் டிவியில் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது சற்றேற குறைய 75% கடந்துவிட்டது. ஆனால் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல்வேறு போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில், இப்போது 10 போட்டியாளர்கள் மட்டுமே அந்த வீட்டில் எஞ்சி இருக்கிறார்கள்.
முன்பெல்லாம் மக்கள் மத்தியில் பிரபலமான நபர்களை மட்டுமே இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனுமதித்து வந்தார்கள். ஆனால் இந்த சீசனில் எந்தவித பின்புலமும் இல்லாமல் டிக் டேக் செயலியின் மூலமாக பொதுமக்களிடையே பிரபலமாகி வந்த தனலட்சுமி என்பவரை இந்த பிக்பாஸ் வீடு தேர்ந்தெடுத்தது.
மேலும் சற்றேற குறைய 75 நாட்களை கடந்துவிட்ட நிலையில், இன்றும் பிக்பாஸ் வீட்டில் தனலட்சுமி விளையாடி வருகிறார். இது அவருக்கு ரசிகர்களிடையே இருக்கும் வரவேற்பை காட்டுகிறது.அதோடு பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதிக்கட்டம் நெருங்கி வருகின்ற நிலையில், வாரந்தோறும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டு வருகிறார். சென்ற வாரம் இந்த போட்டியில் இருந்து ஜனனி வெளியேற்றப்பட்டார்.
இந்த நிலையில் தான் இந்த வாரம் இந்த வீட்டில் இருந்து யார் வெளியேறுவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். ஆனால் இந்த நிகழ்ச்சியில் ரசிகர்கள் யாரும் எதிர்பாராத விதத்தில் தனலட்சுமி இந்த வீட்டிலிருந்து வெளியேற இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. இது ரசிகர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. ஆனாலும் இந்த தகவல் இதுவரையில் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. ஆகவே எலிமினேஷனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.