துணிவு படத்திற்கு பிறகு நடிகர் அஜித்தின் அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது.. தற்காலிகமாக AK 62 என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்பட்டது. நடிகர் அரவிந்த் சாமி இப்படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாகவும், நடிகர் சந்தானம் இந்த படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது.. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று கூறப்பட்ட நிலையில் ஏகே 62 படத்தில் இருந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டுள்ளார் என்ற தகவல்கள் இணையதளத்தில் ஹாட் டாபிக்காக மாறி உள்ளது..
எனவே AK 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்க மாட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. விக்னேஷ் சிவன் கொடுத்த கதையில் அஜீத் திருப்தி அடையவில்லை என்றும், அதில் மாற்றம் செய்யுமாறும் அஜித் கேட்டுக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மறுபுறம் நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜுடன் கைகோர்த்துள்ள தளபதி 67 படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.. எனவே அதற்கு இணையான எதிர்பார்ப்பை உருவாக்க மிகப்பெரிய மாஸ் ஆக்ஷன் படத்தில் நடிக்க அஜித் முடிவு செய்துள்ளாராம்.. இதனால், அட்லீ, பிரசாந்த் நீல், விஷ்ணு வர்தன், மகிழ் திருமேனி போன்ற இயக்குனர்களிடம் அஜித் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது..
அட்லீ, பிரசாந்த் நீல் ஆகியோர் ஏற்கனவே பிசியாக உள்ளதால், மகிழ் திருமேனி அல்லது விஷ்ணு வர்தன் AK 62 படத்தை இயக்கலாம் என்று கூறப்படுகிறது.. ஒரு தரப்பினர் மகிழ் திருமேனி AK 62 படத்தை இயக்க உள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகி வருகிறது.. ஆனால் அதே நேரத்தில் இயக்குனர் விஷ்ணுவர்தன் கூறிய கதை அஜித்திற்கு பிடித்துள்ளதாகவும், அதற்கான வேலைகளை தொடங்க அஜித் அறிவுறுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.. மேலும் விரைவிலேயே இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
மறுபுறம் விக்னேஷ் சிவன் இயக்கவிருந்த படம் கைவிடப்படவில்லை என்றும் அஜித்தின் AK 63 படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என்று கூறப்படுகிறது.. AK 62 படம் மாஸ்- ஆக்ஷன் படமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே விக்னேஷ் சிவன் மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது..