வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா டிக்கெட் விலை குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வாரிசு என்ற திரைப்படம், தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் ஒரே நேரத்தில் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நேரு ஸ்டேடியத்தில் சென்னையில் பிரமாண்டமாக நடக்க உள்ளது. இந்த இசை வெளியீட்டு விழாவிற்கான டிக்கெட் விலை ரூ.4000 வரை விற்பனையாகி வருவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இதைக் கேட்ட ரசிகர்கள் பலரும் இவ்வளவு விலையா என அதிர்ச்சி அடைந்துள்ளனர்.