80களில் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்தவர் தான் நடிகை கௌதமி. இவர் அப்போது முன்னணி நடிகர்களாக இருந்த ரஜினிகாந்த், கமலஹாசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார்.
நடிகை கௌதமி கடந்த 1998ஆம் வருடம் சந்திப் பாட்டியா என்ற நபரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு ஒரு வருடம் கழித்து இருவரும் விவாகரத்து பெற்றுக் கொண்டனர். இவர்களுக்கு சுபலட்சுமி என்ற ஒரு மகள் இருக்கிறார்.
அதன் பின்னர் நடிகர் கமலஹாசனை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார், இந்த நிலையில், சமீபத்தில் கமலஹாசன் உடன் கவுதமிக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் பிரிந்து விட்டனர்.

இவருடைய கைவசம் தற்சமயம் துப்பறிவாளன் 2 சகுந்தலம் உள்ளிட்ட 2️ திரைப்படங்கள் இருக்கின்றன. இதில் சகுந்தலம் திரைப்படம் அடுத்த மாதம் 17ஆம் தேதி வெளியாகிறது.
இந்த நிலையில், நடிகை கௌதமி தன்னுடைய மகள் சுபலட்சுமி உடன் எடுத்துக்கொண்ட ஒரு புதிய புகைப்படம் தற்சமயம் வெளியாகியிருக்கிறது.
இந்த புகைப்படத்தில் கௌதமியின் மகளைக் கண்ட ரசிகர்கள் பலரும் தமிழ் சினிமாவிற்கு ஒரு புதிய கதாநாயகி ரெடி அழகில் முன்னணி நடிகைகளை மிஞ்சி விட்டார் என்று தெரிவித்து வருகிறார்கள்.