பிக்பாஸ் நிகழ்ச்சியில் டாஸ்க்கின்போது மணிகண்டன் மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார் தனலட்சுமி..இதனால் இந்த வாரமும் குறும்படம் உண்டு என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் வாரம் ஒரு பஞ்சாயத்து உருவாகின்றது. தனலட்சுமிதான் இதில் முக்கிய பங்குவகிக்கின்றார். பொதுமக்கள் அடையாளத்தோடு உள்ளே வந்த இவர், முதல்வாரம் ஜி.பி.முத்துவுடன் கடிந்துகொண்டார். பின்னர் அசல்கோளரிடம் என்னை ஆண்டி என அழைப்பதா என சண்டையிட்டார்.
மூன்றாவது வாரத்தில் நடந்த சண்டை நமக்கு நன்றாகவே தெரிந்ததுதான். பொம்மை டாஸ்கின்போது சண்டை போட்டார். அப்போது குறும்படம் போட்டு கமல் தனலட்சுமியை பாராட்டினார். அடுத்த வாரமும் தான் செய்வது சரி என நினைத்து சண்டையை தூண்டும் வகையில் நடந்துகொண்டார். இதற்கு கமல்ஹாசன் கண்டித்தார்.
இந்த வாரம் பேக்கரி டாஸ் கொடுக்கப்பட்டது. இதில் பிக்பாஸ் குழுவினர் ரேம்ப் வழியாக அனுப்பும் பொருளை போட்டியாளர்கள் கைப்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்ப்டது. போட்டியாளர்கள் கைப்பற்ற முயன்றபோது தனலட்சுமி மணகண்டன் தன்னை வேண்டுமென்றே தள்ளிவிட்டார் என்று தனலட்சுமி சண்டையை தொடங்கிவிட்டார். தற்போது மீண்டும் குறும்படம் போட வேண்டும் என தனலட்சுமி கேட்கும் நிலையில் குறும்படம் கிடைக்குமா என எதிர்பார்ப்பில் உள்ளனர் ரசிகர்கள்.
இந்நிலையில் இது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. அதில் தனலட்சுமி கூறியது போலவே மணிகண்டன் நடந்துகொண்டுள்ளார். எனவே இது பற்றிய தெளிவான விளக்கத்திற்கு நாம் காத்திருக்க வேண்டும்.