fbpx

CWC பிரபலங்களுடன் லெஜண்ட் சரவணன்..!! புதிய லுக்கை கவனித்தீர்களா..? வைரலாகும் புகைப்படம்..!!

தி லெஜண்ட் சரவணா ஸ்டோர் உரிமையாளரான சரவணன் அருள் கடந்த 2022இல் வெளியான ‘தி லெஜண்ட்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தனது முதல் படத்தில் அவருக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, சரவணன் இப்போது தனது இரண்டாவது படத்தை எடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். அவர் சமீபத்தில் தனது அடுத்த படத்திற்கான தாடி வைத்த புதிய படத்தை இணையத்தில் வெளியிட்டார். தற்போது, ​​இரண்டு பிரபல ‘குக் வித் கோமாளி’ பிரபலங்கள் உடன் சரவணன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

புதிதாக வரவுள்ள ஒரு விளம்பர படத்தில் நடித்த போது இந்த படத்தை எடுத்துள்ளனர். விஜய் டிவியின் சூப்பர் ஹிட் நிகழ்ச்சியான CWC மூலம் புகழ் பெற்ற மணிமேகலை மற்றும் ஸ்ருதிகா, சமூக ஊடகங்களில் சரவணனுடன் எடுத்துக் கொண்ட படத்தைப் பகிர்ந்து அவரை பாராட்டியுள்ளனர். இன்ஸ்டாகிராமில், மணிமேகலை இந்த படத்தைப் பதிவிட்டு, “நேற்று நடைபெற்ற, The Legend Saravana Stores புதிய விளம்பரப் படப்பிடிப்பில் எடுத்த புகைப்படம் இது. நம்பிக்கையின் நாயகன் லெஜண்ட் சரவணன் சார், அவர் மிகவும் பணிவானவர். நீண்ட நாட்களுக்குப் பிறகு எனது நண்பர் ஷ்ருதிகாவை சந்தித்ததில் மகிழ்ச்சி” என்று பதிவிட்டிருந்தார்.

Chella

Next Post

நாட்டிலேயே அதிக போக்சோ வழக்குகள் நிலுவையில் உள்ள மாநிலம் எது தெரியுமா…..? அதிர்ச்சியில் மக்கள்…..!

Mon Apr 10 , 2023
நாட்டில் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்படும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு நீதி வழங்கும் வகையில், போக்சோ சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் ஒருவர் தண்டனை பெற்றால் அவருக்கு இந்தியாவில் உள்ள எந்த நீதிமன்றத்திலும் ஜாமீன் கிடைக்காது. ஆனால் இந்த சட்டத்தின் கீழ் பதியப்படும் வழக்குகள் உடனடியாக விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று சமீபத்தில் இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.ஆனால் நாட்டிலேயே இந்த போக்சோ சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்குகள் […]

You May Like