fbpx

ஆஸ்கர் விருது வென்ற பயில்வான்..!! ஃபோட்டோ போட்டு வாழ்த்து சொன்ன வெங்கட் பிரபு..!! வெறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்..!!

இயக்குனர் வெங்கட் பிரபு ’மாநாடு’ திரைப்படத்திற்குப் பிறகு வேற லெவலில் உள்ளார். எப்போதுமே கலகலப்பாக இருக்கக்கூடிய அவர், தனது சமூக வலைதள பக்கத்தில் ஆச்சரியப்படும் விதமான விஷயங்களை பகிர்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இவ்வாறு சமீபத்தில் பயில்வான் புகைப்படத்தை வெளியிட்டு ஆச்சரியப்படுத்தி உள்ளார். அதாவது, பயில்வான் ரங்கநாதன் நடிகர்கள், நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை யூடியூப்பில் பேசி அதிக பிரபலமாகி உள்ளார். தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் நிலையில், அவருடைய புகைப்படத்தை வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார். அதுவும் ஏ.ஆர்.ரகுமான் ஸ்டைலில் வெளியிட்டு இருக்கிறார்.

அதாவது பயில்வான் ரங்கநாதன் தன்னுடைய இரண்டு கைகளிலும் ஆஸ்கர் வைத்திருப்பது போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். அதில் இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்ற இசையமைப்பாளர் இசை வெல்லம் பயில்வான் ரங்கநாதன் சாருக்கு அவரது பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்காக மனமார்ந்த வாழ்த்துக்கள். எங்களுக்கு செம்ம பெருமையான தருணம், உங்கள் பணியின் தீவிர ரசிகன் சார் என்று இயக்குனர் வெங்கட் பிரபு பதிவிட்டிருக்கிறார். எப்படி பயில்வானுக்கு ஆஸ்கர் கிடைத்துள்ளது என்ற குழப்பம் ரசிகர்களுக்கு உருவாகியுள்ளது. அதாவது ஒரு படத்தின் ப்ரோமோஷனுகாக வெங்கட் பிரபு இவ்வாறு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், ஜிவி பிரகாஷின் படத்தில் பயில்வான் நடிக்கிறார் என்றும் அவரை வைத்து ப்ரோமோஷன் செய்துள்ளனர். ஏனென்றால், பயில்வான் எது செய்தாலும் இப்போது வைரலாக பரவி வருகிறது. வெங்கட் பிரபு பதிவிட்டுள்ள போட்டோவை பயில்வானும் தனது முகநூலில் வெளியிட்டிருக்கிறார். அதுமட்டுமின்றி இந்த போட்டோவுக்கான காரணம் விரைவில் வெளியாக இருக்கிறது. எந்த படத்தில் பயில்வான் நடிக்கிறார் என்ற விவரம் வெளியாகவில்லை. மேலும், பயில்வானின் ஆஸ்கர் போட்டோவை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து இணையத்தில் கலாய்த்து வருகின்றனர்.

Chella

Next Post

’வயசானாலும் அந்த கவர்ச்சிய மட்டும் காட்ட மறக்கலையே’..!! ’நாட்டாமை டீச்சர் இப்போ எப்படி இருக்காங்க பாருங்க’..!!

Tue Apr 25 , 2023
ராமராஜன் நடிப்பில் வெளியான “வில்லுபாட்டுக்காரன்” என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ராணி. இவர் தெலுங்கு சினிமாவில் முதலில் தயாரிப்பாளராகத்தான் அடியெடுத்து வைத்தாராம். அதன்பின் நடிகையாக தமிழில் உருவெடுத்துள்ளார். தமிழ், தெலுங்கு என சிலமொழி படங்களில் நடித்து இவர் பிரபலமடைந்தார். இவருக்கு தமிழில் அனைவராலும் பாராட்டப்பட்ட படமாகவும் அனைத்து தரப்பினரிடையே இவரின் புகழுக்கு உறுதுணையாக இருந்த திரைப்படம்கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி சரத்குமார் நடித்த “நாட்டாமை” திரைப்படம் தான். இப்படத்தில் டீச்சராக நடித்த […]
’வயசானாலும் அந்த கவர்ச்சிய மட்டும் காட்ட மறக்கலையே’..!! ’நாட்டாமை டீச்சர் இப்போ எப்படி இருக்காங்க பாருங்க’..!!

You May Like