தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது சின்னத்திரையில் பிஸியான நடிகையாக இருப்பவர் தான் சுஜிதா தனுஷ். நடிப்பது மட்டுமின்றி அவர் பல நடிகைகளுக்கு மலையாளத்தில் டப்பிங் கூட பேசி வருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் அவர் மூத்த அண்ணி தனம் ரோலில் நடித்து வருகிறார். அந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது.

தற்போது சுஜிதா புது வீடு கட்டி இருக்கிறார். அதன் கிரஹப்பிரவேசம் நடந்து முடிந்திருக்கிறது. இந்த புதிய வீட்டில் சுஜிதா, அவரது கணவர் மற்றும் மகன் உடன் குடியேறி இருக்கிறார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனைக் கண்ட நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.