தமிழ் சினிமாவில் பல ரொமான்டிக் திரைப்படங்களை இயக்கி அதனை வெற்றி திரைப்படங்கள் ஆக்கியவர் தான் இயக்குனர் மணிரத்தினம். இவருடைய இயக்கத்தில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இன்று வரையில் அந்த திரைப்படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது.
அந்த திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகி தற்போது வரையில் தமிழகத்தில் இருக்கின்ற திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. அதோடு பொன்னியின் செல்வன் திரைப்படம் வசூல் சாதனை படைத்திருக்கிறது என்றே சொல்லலாம் வெறும் 150 கோடி ரூபாய் மதிப்பில் உருவான இந்த திரைப்படம் 500 கோடியை தாண்டி வசூலித்து இருக்கிறது.
இந்த திரைப்படத்தின் 2ம் பாகத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்த நிலையில் தான் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் 2ம் பாகம் தொடர்பான தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.
இந்த திரைப்படத்தின் 2ம் பாகம் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி பல மொழிகளில் திரைக்கு வரும் என்று தெரிவிக்கப்படுகிறது
ஏற்கனவே இந்த திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளியானது. இந்த திரைப்படம் 5 மொழிகளில் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.
இந்த திரைப்படம் தமிழ்நாடு மற்றும் சர்வதேச அளவில் திரையரங்குகளில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
அத்துடன் இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்த ஊமை ராணி கதாபாத்திரத்தை இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் விரிவாக காண்பதற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் தான் பொன்னியன் செல்வன் திரைப்படத்தின் 2ம் பாகத்தின் அப்டேட் இன்று மாலை 4 மணி அளவில் வெளியாகும் என்று லைக்கா நிறுவனம் தெரிவித்திருக்கிறது.