நடிகர் விஜய் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் மிக விரைவில் வெளியாக இருக்கிறது. அந்த திரைப்படம் எப்போது வெளியாகும் என்று அவருடைய ரசிகர்கள் மிக ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்யுடன் ஷியாம், ஸ்ரீகாந்த், பிரகாஷ்ராஜ், சரத்குமார், ராதிகா, குஷ்பூ போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
இந்த திரைப்படத்தின் சென்சார் பணிகள் இன்னும் முடிவடையவில்லை என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில், இந்த திரைப்படம் வெளியாகும் தேதியை இந்த படக்குழு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அதேபோல வாரிசு திரைப்படத்தின் மோத தயாராக இருக்கும் துணிவு திரைப்படத்தின் ரிலீஸ் தேதியும் இன்னும் வெளியிடப்படாமல் உள்ளது.
இந்த நிலையில், தான் வாரிசு திரைப்படத்தின் கதாநாயகி ராஷ்மிகா இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் சற்று முன்பு உரையாடி இருக்கிறார். வாரிசு திரைப்படத்தின் வெளியிட்டுக்கு இன்னும் 2 தினங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அவர் மிகவும் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார். ஜனவரி மாதம் 11-ம் தேதி வெளியாகிறது. அந்த திரைப்படம் உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.