fbpx

ஜனவரி 27 முதல் 31-ம் தேதி வரை SOC திரைப்படத் திருவிழா…! எங்கு நடைபெற உள்ளது தெரியுமா…?

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு திரைப்படத் திருவிழாவை தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் மூலம் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் 2023, ஜனவரி 27 முதல் 31 வரை மும்பையில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளது.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியாவின் தலைமைத்துவத்தை நினைவு கூறும் வகையில், எஸ்சிஓ திரைப்பட திருவிழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்திருவிழா குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கூடுதல் செயலாளர் நீர்ஜா சேகர், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உள்ள பல்வேறு நாடுகளின் கலாச்சாரங்களை இணைக்கும் வகையிலும், சினிமாத் துறையில் கூட்டாண்மையை ஏற்படுத்தும் வகையிலும், திரைப்பட திருவிழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

போட்டிப் பிரிவு மற்றும் போட்டிப் பிரிவில் இல்லாத திரைப்படங்கள் என மொத்தம் 57 திரைப்படங்கள் திரையிடப்படும் என்று அவர் தெரிவித்தார். அத்துடன் உரையாடல் நிகழ்ச்சி, நாடுகள் மற்றும் மாநிலங்களின் அரங்குகள், புகைப்படம் மற்றும் சுவரொட்டிக் கண்காட்சிகள், கைவினைப்பொருட்கள் அரங்குகள் உள்ளிட்டவை இடம் பெற உள்ளது.

தொடக்க நிகழ்ச்சி மும்பையில் உள்ள ஜாம்ஷெட் பாபா திரையரங்கில் 27 ஜனவரி 2023 அன்று நடைபெறும் என்று தெரிவித்தார். சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர் ஆகியவற்றுக்கான வழங்கப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.

Vignesh

Next Post

’தமிழ்நாட்டில் அனைத்து கல்லூரிகளிலும் நாப்கின் இயந்திரங்கள்’..!! உயர்நீதிமன்ற கிளை அதிரடி..!!

Tue Jan 24 , 2023
தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் தானியங்கி நாப்கின் இயந்திரங்களை வைக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்ற கிளை கருத்து தெரிவித்துள்ளது. மதுரை கே.கே.நகரை சேர்ந்த பொழிலன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழ்நாட்டில் தற்போது கல்லூரிகள் அதிகமாகி உள்ளன. கடந்த ஆண்டுகளை விட கூடுதல் சதவீதமாக பெண்கள் உயர்கல்வி பயின்று வருகின்றனர். சிறிய நகரங்கள் முதல் பெரு நகரங்கள் வரை […]
’தமிழ்நாட்டில் அனைத்து கல்லூரிகளிலும் நாப்கின் இயந்திரங்கள்’..!! உயர்நீதிமன்ற கிளை அதிரடி..!!

You May Like