தமிழ்சினிமா உலகில் எம்.ஜி.ஆர். சிவாஜிக்கு இணையாக வில்லத்தனமான நடிப்பின் மூலம் மக்களைக் கவர்ந்த அசாகன் அவர்களின் மகனை நீங்கள் பார்த்துள்ளீர்களா?
எஸ்.ஏ.அசோகன் தன் நடிப்பின் மூலம் மக்களை வெகுவாக கவர்ந்த ஒரு நடிகர்.. பட்டப்படிப்பு முடித்திருந்த அசோகன் அவர்களை முதல்முறைாயாக இயக்குனர் டி.ஆர். ராமண்ணாவை சந்தித்துள்ளார். அவர்தான் அசோகனை திரை உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார். அந்த வகையில் இவர் ஒளவையார் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி பின்னர் 1960 மற்றும் 1970ம் ஆண்டுகளில் பெரும்பாலும் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்து நல்லவரவேற்பை பெற்றார்.
திரைப்படங்களில் வரது குரலின் தனித்துவம் வசனங்களை இவர் உச்சரித்த விதம் இவருக்கு நல்ல பெயரைக் கொடுத்தது. இதனிடைய மேரி ஞானம் என்பவரை நடிகர் அசோகன் திருமணம் செய்து கொண்டார். திருமணமான இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் ஒரு மகனாக அமல்ராஜ் காலமாகிவிட்டார்.
மற்றொருவர் யார் தெரியுமா? அவரை பிரபல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற ஒரு சினிமா நடிகராக நீங்கள் பார்த்திருப்பீர்கள். தமிழ்சினிமாவில் வின்சென்ட் அசோகனும் ஒரு வில்லன் நடிகர்தான். தந்தையைப் போலவே வில்லனாக வலம் வருகின்றார். பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இயக்குனர் வெங்கடேஷ் இயக்கத்தில் வெளியான ஏய் என்ற திரைப்படத்தின் மூலம் வில்லன் நடிகராக அறிமுகமானார். தொட்டி ஜெயா , போக்கிரி , ஆழ்வார், வேலாயுதம் போன்ற பல படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தைதக்க வைத்துக் கொண்டுள்ளார். ஒரு பேட்டியில் தனது தந்தை அசோகன் குறித்து பேசி இருந்தார்.அதில் அவர் , அப்பா என்னை சினிமாவில்இருந்துதள்ளி வைத்திருந்தார். என கூறினார்.
நான் நன்றாக படிக்க வேண்டும் என அவர் ஆசைப்பட்டதால் நான் நடிக்க வேண்டும் என சொன்னால் கூட அவர் படித்துவிட்டு சினிமாவிற்கு வா என கூறுவார். நான் 12ம் வகுப்பு படிக்கும் போதே அவர் இறந்துவிட்டார். பின்னர் என் பட்டப்படிப்பை முடித்தேன். அதன் பின்னர் சினிமாவில் நுழைந்தேன் என தெரிவித்துள்ளார்.