fbpx

கொடிய நோயால் அவதி..!! இதுதான் அறிகுறிகள்..!! சொல்லவே முடியாத கஷ்டங்களை அனுபவிக்கும் சமந்தா..!!

நடிகை சமந்தா அளித்த பேட்டிகளில், தான் நோய் பாதிப்பால் பட்ட துன்பங்களை பகிர்ந்துள்ளார். கிட்டத்தட்ட 3 மாதங்கள் சொல்லவே முடியாத கஷ்டங்களை அனுபவித்ததாகவும், உடல்நிலை மோசமாகி வருவதால் சில காலம் நடிப்புக்கு ஓய்வு கொடுப்பதை பற்றி யோசிப்பதாகவும் கூறியுள்ளார். அப்படி என்ன மாதிரியான நோய் பாதிப்புகளை மயோசிடிஸால் அவர் அனுபவித்தார் என்பதை இந்த பதிவில் காணலாம்.

மயோசிடிஸ் நோய் பாதிப்பு காரணமாக சமந்தாவின் உடல்நிலை மோசமாகிவிட்டது. எந்த அளவுக்கு என்றால், அவருடைய தசைகள் பயங்கர வலியை கொடுத்துள்ளன. எலும்புகள் பலவீனமாகி சோர்ந்துவிட்டார். சில நாட்களில் படுக்கையில் இருந்து எழுவது கூட சமந்தாவிற்கு சிரமமாக இருந்துள்ளது. அந்த சோம்பல், இயலாமையை எதிர்த்துப் போராட வேண்டும் என பல முறை நினைத்ததாகவும் சமந்தாவே கூறியுள்ளார். அவருக்கு கடுமையான ஒற்றைத் தலைவலி பாதிப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த தலைவலியால் சாதாரணமான செயல்களை செய்வது கூட கடினமாக இருப்பதாகவும் பகிர்ந்துள்ளார். ஒரு பேட்டியில் சமந்தா, “ஒரு நாள் வாளிப்பாகவும் (puffy), ஒரு நாள் குண்டாக (fat) இருக்கிறேன், ஒரு நாள் உடம்பு சரியில்லாமல் இருக்கிறேன். என்னுடைய தோற்றத்தில் எனக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை” என கூறியுள்ளார்.

மயோசிட்டிஸுடனான தனது போராட்டத்தில், சமந்தா கண்களில் பெரும் வலியை அனுபவித்துள்ளார். கண்களில் ஊசி குத்துவது போன்ற வலியுடன் காலை படுக்கையில் இருந்து எழுவாராம். “அவரது கண்களில் கடுமையான வலி, கண்கள் வீங்கி சில நாள்கள் மோசமாக விடிகிறது. கடந்த 8 மாதங்களாக இப்படி அவதியுறுவதாக” சமந்தா பேட்டியில் கூறியுள்ளார். மயோசிடிஸ் நோய் வந்த ஒருவர் நிறைய தடுமாற்றங்களை சந்திக்க நேரிடும். பலவீனமாகி கீழே விழும் நிலை ஏற்படும். மயோசிடிஸ் நோய் பாதிக்கப்பட்ட பிறகு நடப்பதும், நிற்பதும் கூட சிரமம் தான். கொஞ்ச நேரம் ஆக்டிவாக நடந்தால் அல்லது நின்றால் அவர்கள் மிகவும் சோர்வடைகிறார்கள். அதில் சமந்தாவும் விதிவிலக்கல்ல. தன்னுடைய சமூக வலைதளங்களில் சமந்தா நோய் பாதிப்பு குறித்து அவ்வப்போது பகிர்வார். அதில்கூட தான் பலவீனமாகவும், தசைகளில் வலியை அனுபவிப்பதாகவும் பகிர்ந்துள்ளார். அவருடைய இந்த போராட்டம் முடிவுக்கு வரவேண்டும் என்பது ரசிகர்களின் மனக்குமுறலாக உள்ளது. 

Chella

Next Post

நடன கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை வழங்கிய பேராசிரியர் நடவடிக்கை எடுக்க கோரி உள்ளிருப்பு போராட்டத்தில் குதித்த மாணவிகள்……! திருவான்மியூரில் பரபரப்பு…….!

Fri Mar 31 , 2023
சென்னை திருவான்மியூரில் செயல்பட்டு வரும் கலாஷேத்ரா அறக்கட்டளை கல்லூரியில் 200க்கும் அதிகமான மாணவிகள் நடனம் பயின்று வருகிறார்கள். இந்த கல்லூரியில் நடனம் பயிலும் மாணவிகளுக்கு பேராசிரியர் ஒருவர் பாலியல் தொந்தரவு வழங்குவதாக அந்த கல்லூரியின் முன்னாள் இயக்குனர் லீலா சாம்சன் சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார். ஆகவே அந்த கல்லூரியில் பாலியல் தொந்தரவு வழங்கிய பேராசிரியர் மீது எழுந்திருக்கின்ற பாலியல் புகார் தொடர்பாக தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா […]

You May Like