fbpx

டிஆர்பியில் பயங்கர அடி வாங்கிய சன் டிவி..!! பிரபல சீரியலுக்கு முழுக்கு போட்ட இயக்குனர்..!! பரபரப்பு தகவல்கள்

கிட்டத்தட்ட 4 வருடங்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த தொடர் நிறைவுக்கு வந்தது.

வெள்ளித்திரையை விட சின்னத்திரை பிரபலங்களுக்கு தான் தற்போது ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஏனென்றால், வாரத்தில் 6 நாட்கள் எல்லா தொலைக்காட்சிகளிலும் சீரியல் தான் ஒளிபரப்பாகி வருகிறது. அதிலும், சன் டிவி மற்றும் விஜய் டிவி தான் டிஆர்பியில் முதல் 5 இடங்களை பெறுகிறது. பெரும்பாலும் சன் டிவியில் எதிர்நீச்சல், சுந்தரி, ரோஜா, கயல் போன்ற தொடர்கள் டிஆர்பியில் இடம் பெறும். அதேபோல் விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா, பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் ஆகிய தொடர்கள் டிஆர்பியில் வந்துவிடும்.

டிஆர்பியில் பயங்கர அடி வாங்கிய சன் டிவி..!! பிரபல சீரியலுக்கு முழுக்கு போட்ட இயக்குனர்..!! பரபரப்பு தகவல்கள்

இந்நிலையில், கடந்த 2018இல் தொடங்கப்பட்ட சீரியல் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. அதாவது, சன் டிவியில் கிட்டத்தட்ட 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த தொடர் ரோஜா. இந்த தொடரில் சிபு சூரியன், பிரியங்கா நல்காரி, காயத்ரி, வடிவுக்கரசி, ராஜேஷ் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இத்தொடரில் இருந்து சிபு சூரியன் விலகப்போவதாக அறிவித்தார். ஆனால், ரசிகர்கள் ரோஜா சீரியல் தொடரை விட்டு நீங்கள் போகக்கூடாது என வேண்டுகோள் வைத்ததால் அர்ஜுன் கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடித்து வந்தார். மேலும், அவரது மனைவியாக ரோஜா கதாபாத்திரத்தில் பிரியங்கா நடித்து வந்தார்.

இந்த தொடர் டிஆர்பியில் எப்போதுமே நல்ல இடத்தை பெற்று வந்தது. இந்நிலையில் நேற்று இத்தொடரின் கிளைமேக்ஸ் காட்சி ஒளிபரப்பானது. இதில் ரோஜா மற்றும் அர்ஜுன் குழந்தைக்கு பெயர் சூட்டு விழா உடன் இத்தொடர் நிறைவு பெற்றது. அதாவது இந்த தொடர் ஆரம்பத்தில் முருகனுடன் தொடங்கப்பட்டது. கடைசியாக அந்த குழந்தைக்கு வேலன் என்று பெயர் சூட்டி இருந்தனர். மேலும், இத்தொடரில் வில்லி இறந்தவுடன், குடும்பம் ஒன்று சேர்ந்து உள்ளனர். இத்துடன் தொடருக்கு சுபம் போட்ட முடித்து வைத்துள்ளனர். ரோஜா தொடரின் முடிவால் டிஆர்பியில் சன் டிவி பெருத்த அடி வாங்கும் என கூறப்படுகிறது.

Chella

Next Post

ஆர்.எஸ்.பாரதி கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்..? வெளியான பரபரப்பு தகவல்..!! அதிர்ச்சியில் திமுகவினர்..!!

Sun Dec 4 , 2022
விரைவில் ஆர்.எஸ்.பாரதி கட்சியிலிருந்து நீக்கப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. கட்சிக்கு விசுவாசமாக இருந்தால் எளிதில் பதவி கிடைக்காது என திமுக எம்பி ஆர்.எஸ். பாரதி தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார். உழைத்தவர்களுக்கு பதவி கிடைக்கவில்லை. உழைக்காதவர்கள் பதவியில் உட்கார்ந்துள்ளனர். கட்சிக்காக அரும்பாடு பட்ட தனக்கு 60 வயது கடந்தவுடன்தான் எம்.பி பதவியே வழங்கப்பட்டது என்று அவர் குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுத்துள்ள முதலமைச்சர் முக.ஸ்டாலின், பதவி வரும் போகும், கழகமே நம் […]

You May Like