fbpx

தளபதி 68 படத்தின் இயக்குனர் அதிரடி மாற்றம்..!! இவர்தானாம்..!! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். தற்போது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பாக லலித் குமார் மற்றும் ஜெகதீஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. தற்போது சென்னையில் விஜய் – அர்ஜூன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, விஜய் நடிக்க இருக்கும் தளபதி 68 படத்தை சூப்பர் குட் ஃபிலிம்ஸ் அல்லது ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

முதலில் இந்தப் படத்தை கோபிசந்த் மல்லினேனி இயக்கவிருப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து, மீண்டும் தெலுங்கு இயக்குநரா என விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில், தற்போது இந்த படத்தை இயக்க வெங்கட் பிரபு பரிசீலனையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் தற்போது பெரும்பாலும் சீரியஸான ரோல்களில் நடித்துவரும் நிலையில், ஒருவேளை வெங்கட் பிரபு உறுதியானால் விஜய்யை கலகலப்பான வேடத்தில் காணலாம் என அவரது ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

Chella

Next Post

நில அளவர் வரவையாளர் காலி பணியிடங்கள்…..! தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…..!

Mon May 15 , 2023
தமிழகத்தில் நில அளவர், மற்றும் வரவையாளர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான 2ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு வருகின்ற 23ஆம் தேதி நடைபெற இருப்பதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்திருக்கிறது. இது குறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நில அளவர் மற்றும் வரவையாளர் காலிப்பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு சென்ற வருடம் நவம்பர் மாதம் நடந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் தரவரிசை விவரங்கள் சென்ற பிப்ரவரி மாதம் […]
tnpsc

You May Like