தமிழ் சினிமாவின் காதல் மன்னன் என்று 70, 80 களில் புகழப்பட்டவர் ஜெமினி கணேசன். தன்னுடை நடிக்கும் நடிகைகளுடன் ரொமான்ஸ் செய்வதில் அனைவரையும் மிஞ்சிய கலைஞர் தான் ஜெமினி கணேசன் அவர்கள். அப்படி அவருக்கும் நடிகை புஷ்பவல்லிக்கும் பிறந்த மகளாக சினிமாவில் கொடிக்கட்டி பறந்தவர் நடிகை ரேகா என்கிற பாணு ரேகா கணேசன்.
சிறு வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன்பின் 15 வயதில் அஞ்சனா சஃபர் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இந்தியா முழுவதும் பல மொழிகளில் நடித்து வந்த ரேகா தற்போது குணச்சித்திர ரோலில் பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். தன்னுடைய சுயசரிதை புத்தகத்தை யசீர் உஸ்மானை வைத்து எழுதி வெளியிட்டார். அதில் தனக்கு நடந்த கொடுமைகளை பற்றியும் பதிவிட்டுள்ளார்.
அதில், அஞ்சனா சஃபர் படத்தில் நடிகர் பிஸ்வஜீத் சாட்டர்ஜி என்பவருடன் ஜோடிப்போட்டு நடித்தார் ரேகா. அப்போது இயக்குனர் ரேகாவிடம் சொல்லாமல் ஒரு 5 நிமிட முத்தக்காட்சியை எடுத்திருக்கிறாராம். ஷூட்டிங்கின் போது ஆக்ஷன் சொன்னதும் பிஸ்வஜீத் சாட்டர்ஜி, தன் உதட்டில் 5 நிமிடங்கள் விடாது முத்தம் கொடுக்க ஆரம்பித்துவிட்டார். இதனால் அங்கு கதறி அழுது கொண்டே இருந்தேன்.
என்னை ஷூட்டிங்கில் இருந்தவர்களும் இயக்குனரும் கைத்தட்டியும் விசில் அடித்தும் சிரித்தனர். இப்படியொரு காட்சி எடுக்கப்படும் என்பதை என்னிடம் கூறாமல் இயக்குனர் அந்த காட்சியை எடுத்துள்ளார். இதுகுறித்து பிஸ்வஜீத் சாட்டர்ஜி கூறுகையில், இது முழுக்க முழுக்க இயக்குனரிம் பிளான் என கூறினார்.
எதார்த்தமாக இருக்க வேண்டும் என்றும் கதைக்கு தேவைப்பட்ட காட்சிகள் என்பதால் இதை ரேகாவிடம் கூறாமல் எடுத்துள்ளார் என்று கூறியுள்ளார். இந்த சம்பவத்தை வெளியில் கசியவிடாமல் ரகசியமாக பார்த்துக்கொண்டனர். ஆனால் தற்போது தன்னுடைய சுயசரிதை புத்தகத்தில் மனம் விட்டு பேசியிருக்கிறார் நடிகை ரேகா