வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் புஷ்பா என்னும் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரேஷ்மா. இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர், பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலம் இவருக்கென்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் தற்போது மாடல் நடிகர் நரேஷ் உடன் படு நெருக்கமாக திருமண தீமில் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளன.
ஆனால், இந்த போட்டோக்களை நடிகர் நரேஷ் கடந்த ஓராண்டுக்கு முன்னதாகவே தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள நிலையில், திடீரென தற்போது ஏன் ரேஷ்மா இந்த புகைப்படங்களை ப்ரமோட் செய்கிறார் என்கிற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். மேலும், போட்டோக்களை பார்த்த நொடியிலேயே சில நெட்டிசன்கள் அப்போ இவரு தான் அந்த புஷ்பா புருஷனா என வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தின் காமெடியை வைத்து கலாய்த்து வருகின்றனர். மேலும், ’இவங்க உண்மையாவே ஜோடிகளா’ என்றும் ’யாருடா அவன் என் ஆளு கூட’ என ஏகப்பட்ட கமெண்ட்டுகளை இந்த போஸ்ட்டுக்கு கீழ் பதிவிட்டு வருகின்றனர்.
பச்சை நிற பட்டுச் சேலையில் ரேஷ்மா திருமண கோலத்திலும், பச்சை சட்டை வேட்டியில் நரேஷ் மாப்பிள்ளையாகவும் போஸ் கொடுத்துள்ளனர். உங்க ஜோடி பொருத்தம் சூப்பர் என்றும் நல்ல பிரைடல் போட்டோஷுட் இது என்றும் ஏகப்பட்ட லைக்குகளும் கமெண்ட்டுகளும் இந்த போட்டோக்களுக்கு குவிந்து வருகின்றன.