அஜித், விஜய் உள்ளிட்டஇருபெரும் நடிகர்கள் தமிழ் திரை உலகில் மிகப்பெரிய ஜாம்பவான்களாக திகழ்ந்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் நடித்த திரைப்படங்கள் எப்போது வெளியானாலும் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
கடந்த 2014 ஆம் வருடம் பொங்கல் தினத்தன்று அஜித் நடித்து வெளியான வீரம் திரைப்படம், விஜய் நடித்து வெளியான ஜில்லா திரைப்படம் உள்ளிட்டவை வசூல் சாதனை படைத்தனர். 2 திரைப்படங்களும் ஒன்றுக்கொன்று சளைத்தவைகள் அல்ல என்று சொல்லும் அளவிற்கு இந்த இரு திரைப்படங்களும் சூப்பர் ஹிட் திரைப்படங்களாகத்தான் இருந்தனர்.
அதேபோன்று சுமார் 9 வருடங்கள் கழித்து இந்த வருடம் பொங்கலுக்கு அஜித் நடிப்பில் துணிவு திரைப்படமும், விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படமும் திரைக்கு வரவிருக்கிறது.
அந்த வகையில், ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்திருக்கும் திரைப்படம் துணிவு இந்த திரைப்படம் வரும் 11ஆம் தேதி வெளியாக இருக்கின்றது இந்த திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை வைத்திருக்கிறார்கள்.
இந்த திரைப்படத்தில் அஜித் உடன் ஒன்றிணைந்து மஞ்சு வாரியர் சமுத்திரகனி உள்ளிட்ட பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருக்கின்றனர்.
இந்த திரைப்படத்தைப் பார்த்துவிட்டு இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் மகிழ்ச்சியுடன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். மேலும் துணிவு திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி தொடர்பாக இந்த திரைப்படத்தில் நடித்துள்ள நடிகர் சமுத்திரகனி பேட்டி அளித்துள்ளார். இதில் துணிவு திரைப்படத்தின் கிளைமாக்ஸ் இல் ட்விஸ்ட் தெறிக்க போகுது என்று தெரிவித்திருக்கிறாராம் சமுத்திரக்கனி. இது இந்த திரைப்படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை ரசிகர்களும் மத்தியில் அதிகரிக்க வைத்திருக்கிறது.