fbpx

“பாட்டி வயசுல உனக்கு குழந்தை வேணுமா?” ஆசையாய் கேட்ட வனிதாவுக்கு நோ சொன்ன ராபர்ட் மாஸ்டர்.. ஜோவிகாவை திட்டித் தீர்க்கும் இணையவாசிகள்..

பொதுவாக வனிதா என்றாலே நமது நினைவிற்கு வருவது அடாவடிதான். இவர் தனது நடிப்பின் மூலம் பிரபலம் ஆனதை விட, தனது பேச்சால் பிரபலம் ஆனவர் என்றே சொல்லலாம். இவரது திருமண வாழ்க்கை, இவர் நினைத்த அளவிற்கு சிறப்பாக இல்லை என்றே சொல்லலாம். பலர் இவர் இன்னும் எத்தனை திருமணத்தை தான் செய்வார் என்று விமர்சித்தனர். இவருக்கு சினிமா வாய்புகள் சரியாக கிடைக்காத நிலையில், இவர் விஜய் டிவியின் குக் வித் கோமாளி, பிக்பாஸ் நிகழ்ச்சிகள் மூலமும் இவரது ரசிகர்கள் வட்டத்தை அதிகரித்த்துக் கொண்டார். இதன் மூலம், இவருக்கு தற்போது பட வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.

இவர் தனது சொந்த குடும்பத்தை விட்டு தனியாக வாழ்ந்து வரும் நிலையில், தன்னுடைய அம்மா, அப்பா மற்றும் உடன் பிறந்தவர்கள் குறித்து அவ்வப்போது தனது வருத்தத்தையும் ஆதங்கத்தையும் பகிர்ந்து வருகிறார். இவர் மூன்றாவதாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து அதுவும் தோல்வியில் முடிந்த நிலையில், சமீபத்தில் இவர் கடற்கரை ஒன்றில் ராபர்ட் மாஸ்டரின் கையை பிடித்தபடி அமர்ந்திருக்கும் போட்டோவை வெளியிட்டிருந்தார். அதைப் பார்த்த ரசிகர்கள் மீண்டும் மீண்டுமா? என்ற கேள்வியை எழுப்ப, பிறகு தான் அது மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தின் ப்ரமோஷன் என்பது தெரியவந்தது.

ஆம், மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தில் ஜோவிகா விஜயகுமார் தயாரிப்பாளராக களமிறங்கும் நிலையில், ராபர்ட் மாஸ்டர் மற்றும் வனிதா ஜோடியாக நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி கூடிய சீக்கிரத்தில் வெளியாக இருக்கும் நிலையில், படத்தின் டீசர் தற்போது வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த டீசரில், 40 வயசு ஆனா என்ன, எனக்கு குழந்தை வேணும் என்று வனிதா ஒரு பக்கம் அடம்பிடிக்க, ராபர் மாஸ்டரோ, பாட்டி வயதில் உனக்கு குழந்தை வேணுமா என்று நோ சொல்லுகிறார். இதனால் இருவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்படுகிறது. மேலும், மெத்தையில் படுத்துக்கொண்டு, வனிதா ராபர்ட் மாஸ்டரை கட்டிப்பிடித்து பயங்கர ரொமான்ஸ் செய்கிறார்.

இதைப்பார்த்து அதிர்ந்துப் போன இணையவாசிகள், இப்படிப்பட்ட கசமுசா படத்தை அவரோட சொந்த மகள் ஜோவிகா தயாரிப்பது நல்லாவா இருக்கு என்று தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Read more: காதலித்து ஏமாற்றிய பிரபல நடிகர்; தற்கொலைக்கு முயற்சி செய்த நடிகை ஸ்ரீபிரியா!!!

English Summary

vanitha vijayakumar’s recent movies trailer was trending

Next Post

அட்டகாசம்...! பெண்களுக்கு மாதம் ரூ.2,500... கர்ப்பிணிகளுக்கு ரூ.21,000.. பாஜக கொடுத்த வாக்குறுதி...!

Fri Jan 17 , 2025
Rs. 2,500 per month for women... BJP's promise

You May Like