fbpx

நடிகை ஸ்ருதிஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரா..? உண்மை என்ன..?

உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளும் நடிகையுமான் ஸ்ருதி ஹாசன் தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் பிசியாக நடித்துவருகிறார்.. மேலும் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதி ஹாசன், சமீபத்தில் தனக்கு பிசிஓஎஸ் என்ற கருப்பை தொடர்பான பிரச்சனை இருப்பதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்தார்.. தனக்கு இருக்கும் பிரச்சனை குறித்து ஸ்ருதிஹாசன் வெளிப்படையாக பேசியதால் பலரும் அவரை பாராட்டி வரும் அதே நேரத்தில், ஸ்ருதியின் உடல்நிலை குறித்து பல வதந்திகள் பரவி வருகின்றன..

ஸ்ருதிஹாசன் உடல் சரியில்லாமல் இருப்பதாகவும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வதந்திகள் பரவி வந்தன.. இந்நிலையில் ஸ்ருதி இதுகுறித்து விளக்கமளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அந்த வீடியோவில் பேசியுள்ள அவர் “அழகான ஹைதராபாத்தில் இருந்து அனைவருக்கும் வணக்கம், நான் இடைவிடாமல் வேலை செய்து, சிறந்த நேரத்தைக் கொண்டிருக்கிறேன். எனது உடற்பயிற்சி முறை மற்றும் பிசிஓஎஸ் இருப்பதைப் பற்றி இரண்டு நாட்களுக்கு முன்பு நான் பதிவிட்டேன். என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன், இது நிறைய பெண்களுக்கு உள்ளது. ஆம், இது சவாலானது, ஆனால் நான் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறேன் அல்லது எந்த வகையான ஆபத்தான நிலையில் இருக்கிறேன் என்று அர்த்தமல்ல.

மேலும் சில ஊடகங்கள் உண்மையான பதிஅவை படிக்காமல் அதை ஊதிப் பெரிதாக்கியுள்ளன என்பதை நான் உணர்ந்தேன்.. நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறேனா என்று கேட்டு இன்று எனக்கும் அழைப்புகள் வந்தன.. எனக்கு பல வருடங்களாக PCOS உள்ளது, நான் நன்றாகவே இருக்கிறேன். எனவே, உங்கள் அக்கறைக்கு நன்றி.” என்று குறிப்பிட்டுள்ளார்.. ஸ்ருதி தற்போது பிரபாஸ் நடிக்கும் சலார் படத்திலும், நந்தமுரி பாலகிருஷ்ணாவின் புதிய படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது…

Maha

Next Post

இந்த மாவட்ட மக்கள் அலர்ட்டா இருங்க.. கனமழை வெளுத்து வாங்குமாம்..

Thu Jul 7 , 2022
நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது… சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோவை, மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக […]

You May Like