நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.. இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.. மேலும் பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, பிரபு, ஜெயசுதா, குஷ்பு, ஸ்ரீகாந்த், சங்கீதா கிரிஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.. இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.. பிரவீன் எடிட்டிங் செய்கிறார்.. கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்கிறார்..
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் விஜய் மற்றும் பிரபு நடிக்கும் காட்சி இணையத்தில் கசிந்ததால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.. படத்தில் இருந்து மேலும் காட்சிகள் கசியாமல் தவிர்க்க செட்டுக்குள் செல்போனுக்கு தடை உள்ளிட்ட கடுமையான விதிகளை விதிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக, விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் புகைப்படம் இணையத்தில் வந்தது. இப்படம் 2022 தீபாவளி அல்லது 2023 பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது..