தமிழ் திரையுலக ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக வெளியான திரைப்படங்கள் அஜித் நடித்து வெளியான துணிவு திரைப்படமும், விஜய் நடித்து வெளியான வாரிசு திரைப்படமும்.
இந்த இரு திரைப்படங்களுமே ஒரே நாளில் வெளியிடப்பட்டாலும் தமிழக அளவில் நல்ல விமர்சனங்களை பெற்ற திரைப்படம் என்றால் அது துணிவு திரைப்படம் தான். ஆனால் தொடக்கத்தில் வாரிசு திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
இருந்தாலும் நாட்கள் செல்ல, செல்ல குடும்ப கதைகளின் ரசிகர்கள் திரையரங்குகளை நோக்கி படையெடுக்க தொடங்கியதில் இருந்து வாரிசு திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.
அதேபோல தொடக்கத்தில் நல்ல விமர்சனங்களை பெற்ற துணிவு திரைப்படம் தற்போது வாரிசு திரைப்படத்தை விட விமர்சனத்தில் முந்தி செல்ல முடியவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் இதுவரையில் தமிழ்நாட்டில் துணிவு திரைப்படத்தை வாரிசு திரைப்படத்தால் முந்தமுடியவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. இருந்தாலும் உலக அளவில் துணிவு திரைப்படத்தை விட அதிகமான வசூலை வாரிசு திரைப்படம் தான் பெற்றிருக்கிறது.
அதாவது, உலக அளவில் துணிவு திரைப்படம் இதுவரையில் 160 கோடி ரூபாய் வரையில் வசூல் செய்திருக்கிறது. அதேநேரம் துணிவு திரைப்படம் 195 கோடி ரூபாய் வரையில் வசூல் செய்து பாக்ஸ் ஆபீஸில் முன்னிலை வகிக்கிறது.
சென்ற 8️ தினங்களில் 195 கோடி ரூபாய் வரையில் மட்டுமே வசூல் செய்துள்ள வாரிசு திரைப்படத்திற்கு அந்த திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதற்குள் 210 கோடி ரூபாய் வசூல் செய்து விட்டது என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.