விஜய் நடிப்பில் கடந்த 11ஆம் தேதி தமிழக முழுவதும் வெளியான திரைப்படம் தான் வாரிசு முதல் 2 நாட்கள் சென்ற நிலையில் கலவையான விமர்சனங்களை பெற்று வந்த இந்த திரைப்படம், தற்சமயம் குடும்ப ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.
உலக அளவில் பாக்ஸ் ஆபிஸில் சிறந்த வசூலை குவித்து வரும் இந்த திரைப்படம் தமிழகத்தில் இதுவரையில் 63 கோடி வரையில் வசூல் சாதனை படைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில், இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் மீது நடிகர் விஜய் சற்று கோபத்தில் இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. அவருடைய கோபத்திற்கு காரணமே வாரிசு திரைப்படம் தெலுங்கில் வெளியாவது தள்ளிப்போனது தான் என்றும் கூறப்படுகிறது.
தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட 2 மொழிகளிலும் கடந்த 11ஆம் தேதி தான் வாரிசு திரைப்படம் வெளியாவதாக இருந்தது. ஆனால் திடீரென்று ஒரு சில காரணங்களை முன்வைத்து தெலுங்கு மொழியில் வாரிசு திரைப்படம் இரண்டு நாட்களுக்குப் பிறகு 14ஆம் தேதி வெளியாகும் என்று தில் ராஜு அறிவித்தார். இதன் காரணமாகத்தான் விஜய் அவர் மீது சற்று அதிருப்தி அடைந்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.