fbpx

சித்ராவின் உடல் உறுப்புகள் என்ன ஆச்சு..? 2 வருடங்கள் கழித்து உண்மையை உடைத்த தோழி..!!

சின்னத்திரை நடிகையும், சித்ராவின் நெருங்கிய தோழியுமான சரண்யா இரண்டு வருடங்கள் கழித்து தன் தோழியின் மரணம் குறித்து பேசியிருக்கிறார்.

விஜே சித்ரா பல சீரியல்களில் நடித்திருந்தாலும் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியல் மூலம் தான் ஏராளமான ரசிகர்களை பெற்றார். முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த அவர் இன்று வரை ரசிகர்கள் மனதில் முல்லையாகவே வாழ்ந்து வருகிறார். இப்போது அந்த சீரியலில் அவருடைய கதாபாத்திரத்திற்கு இரண்டு நடிகைகள் வந்த போதிலும் கூட இவருடைய இடத்தை அவர்களால் நிரப்ப முடியவில்லை என்பதுதான் உண்மை. அதனாலேயே இவர் மரணம் அடைந்து 2 வருடங்கள் கடந்த நிலையிலும், இவருடைய இழப்பு ரசிகர்களை மிகவும் வாட்டி வருகிறது. இவர் இறந்த அன்று இதுதான் நடந்தது என்று பல பேர் பலவிதமான பேட்டிகள் கொடுத்து வந்தாலும் உண்மையில் சித்ராவின் கடைசி நிமிடங்கள் என்ன என்பது ஒரு மர்மமாகவே இருக்கிறது. அவருடைய இறப்பு தற்கொலை மற்றும் கொலை என்ற ரீதியில் பேசப்பட்டாலும் இப்போது வரை அந்த வழக்கு நீதிமன்றத்தில் தீர்ப்பாகவில்லை.

சித்ராவின் உடல் உறுப்புகள் என்ன ஆச்சு..? 2 வருடங்கள் கழித்து உண்மையை உடைத்த தோழி..!!

இந்நிலையில், சின்னத்திரை நடிகையும், சித்ராவின் நெருங்கிய தோழியுமான சரண்யா இரண்டு வருடங்கள் கழித்து தன் தோழியின் மரணம் குறித்து வாய் திறந்து இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த விஷயத்தை பேசுவதற்கே எனக்கு இரண்டு ஆண்டுகள் தேவைப்பட்டது. அந்த அளவுக்கு நான் சித்ராவின் மரணத்தால் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தேன் என்று தெரிவித்துள்ளார். சித்ரா இறப்பதற்கு சில மணி நேரங்கள் முன்பு வரை சரண்யாவுடன் தான் இருந்திருக்கிறார். விஜய் டிவியின் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர்கள் இருவரும் சம்பவ நாளன்று மனம் திறந்து பல விஷயங்களை பற்றி கூறியிருக்கின்றனர். அதில் சித்ரா தான் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து கொண்டதை பற்றி கூறியிருக்கிறார். மேலும் அம்மாவுக்கும் தன் கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாகவும், தனக்கு அதனால் மன அழுத்தம் இருப்பதாகவும் அவர் அழுது கொண்டே தெரிவித்திருக்கிறார்.

சித்ராவின் உடல் உறுப்புகள் என்ன ஆச்சு..? 2 வருடங்கள் கழித்து உண்மையை உடைத்த தோழி..!!

அது மட்டுமல்லாமல் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போதே சில டாக்குமெண்ட்களில் அவர் அவசர அவசரமாக கையெழுத்தும் போட்டிருக்கிறார். இது பற்றி சரண்யா கேட்டதற்கு அவர் மழுப்பலாக ஏதோ ஒரு பதிலை சொல்லி இருக்கிறார். அன்று சித்ரா போனில் யாருடனோ காரசாரமாக விவாதம் செய்ததாகவும், அதிக டென்ஷனில் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வளவு மன அழுத்தம் இருந்த போதிலும் அவர் கேமரா முன் எப்போதும் சிரித்த முகமாகத் தான் இருப்பார் என்றும், இறந்த அன்று கூட அவர் அப்படித்தான் நடந்து கொண்டார் என்றும் சரண்யா கூறியுள்ளார். தற்போது இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் சித்ராவின் உடல் உறுப்புகள் அனைத்தும் பாதுகாக்கப்பட்டு வருகிறதாம். விரைவில் தன் தோழியின் மரணத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று சரண்யா உருக்கமாக தெரிவித்துள்ளார். இரண்டு வருடங்கள் கழித்து சித்ராவின் கடைசி நிமிடங்கள் பற்றி கேள்வியுற்ற ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் இருக்கின்றனர்.

Chella

Next Post

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 2000 டன் காய்கறிகள் தேக்கம்! கலக்கம் அடைந்த வியாபாரிகள்!

Sun Dec 11 , 2022
வங்க கடலில் ஏற்பட்ட மாண்டஸ் புயலின் காரணமாக, பெய்த கனமழையால் தமிழகத்தில் பல்வேறு விதத்தில் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.அந்த பாதிப்புகளை சரி செய்வதற்கான பணிகளை மாநில அரசு தொடங்கியிருக்கிறது. என்னதான் பாதிப்புகளை சரி செய்வதாக மாநில அரசு தெரிவித்தாலும், இந்த மழையின் காரணமாக, பாதிக்கப்பட்ட காய்கறி வியாபாரிகளின் நஷ்டத்தை மாநில அரசு ஈடுகட்டுமா என்பது சந்தேகம் தான். அந்த வகையில் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் இந்த புயலின் தாக்கம் காரணமாக, […]

You May Like