தெலுங்கு திரைப்பட இயக்குனரான வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்திருக்கும் திரைப்படம் வாரிசு.
நடிகர் விஜய் ரொமான்டிக் ஹீரோவாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தாலும் நல்ல நல்ல அவர் மாஸான திரைப்படங்களில் நடிக்க தொடங்கி, தற்போது ரொமான்டிக் ஹீரோ என்ற தோற்றத்தை மாற்றிக் கொண்டு மாஸ் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
தற்போதைய காலகட்டத்தில் விஜய் ஒரு மாஸ் ஹீரோ என்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி உள்ள நிலையில், தற்சமயம் குடும்ப செண்டிமெண்ட் உள்ள திரைப்படமான வாரிசு திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
தற்சமயம் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து திரையரங்குகளில் வெளியாவதற்கு தயாராகி வருகிறது. இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு இன்னும் 10 நாட்களுக்கு குறைவாகவே இருக்கிறது. ஆனால் தற்போது வரையில் இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியிடப்படவில்லை.
ஆனால் புத்தாண்டு ஸ்பெஷலாக அஜித்குமார் நடித்து பொங்கலின் போது வெளியாக இருக்கும் துணிவு திரைப்படத்தின் டிரைலர் வெளியானது. வங்கிக் கொள்ளையை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் கதைக்களம் என்பதால், ட்ரைலரில் மிக அதிக ஆக்சன் காட்சிகளும், மாஸான வசனங்களும் இடம் பெற்று இருந்தது.
ஆனால் இந்த துணிவு திரைப்படத்தின் டிரைலருக்கு வாரிசு திரைப்படத்தின் டிரைலர் ஈடு கொடுக்கும் வகையிலும், இதற்கு பதிலடி தரும் வசனங்களும் இருக்க வேண்டும் என்று படக்குழு பணிபுரிந்து வருகிறது என்று சொல்லப்படுகிறது. அதன் காரணமாக தான் ட்ரைலர் வெளியாக தாமதம் ஏற்படுகிறது என்று தகவல் கிடைத்திருக்கிறது