நடிகர் விஜய் நடிப்பில் பொங்கல் அன்று வெளியாக இருக்கும் திரைப்படம் வாரிசு. இந்த திரைப்படத்தை தெலுங்கு திரைப்பட இயக்குனர் வம்சி இயக்கியிருக்கிறார். இந்த திரைப்படம் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாக இருக்கிறது.
சமீபத்தில் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. நேற்று சன் தொலைக்காட்சியில் முதல் முறையாக இந்த இசை வெளியீட்டு விழா ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டதால் நிச்சயமாக சன் டிவிக்கு டிஆர்பி அதிகரித்திருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
விஜயின் எந்த திரைப்பட நிகழ்ச்சியானாலும் சரி அதனுடைய மனைவி சங்கீதா பங்கேற்றுக் கொள்வார். பிரபலங்களின் வீட்டின் நிகழ்ச்சி என்றாலும் அவர் பங்கேற்றுக் கொள்வார். ஆனால் அட்லி, பிரியா சீமந்தம் வாரிசு இசைய வெளியீட்டு விழாவிற்கு சங்கீதா வரவில்லை.
ஆகவே பல செய்திகள் சமூக வலைதளங்களில இது தொடர்பாக வெளிவந்தன அவர் வராததற்கு முக்கிய காரணம் அவர்களுடைய மகன் மற்றும் மகள் வெளிநாட்டில் இருப்பதால் அவர்களுடன் சங்கீதா வெளிநாட்டில் இருப்பது தான் காரணம் என்று சொல்லப்படுகிறது.