தமிழ் திரையுலகில் தற்போது டாப் நகைச்சுவை நடிகராக இருப்பவர் யோகி பாபு. இவர், நகைச்சுவை மட்டுமின்றி கதையின் நாயகனாகவும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் கூட பொம்மை நாயகி எனும் திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். மேலும், மண்டேலா படம் யோகி பாபுவை ஒரு ஹீரோவாகவே மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தது. ஒரு படத்தில் நடிக்க ஒரு நாளைக்கு ரூ. 10 லட்சம் என யோகி பாபு சம்பளம் வாங்கி வருகிறார் என்றும் தெரிவிக்கின்றனர்.
இப்படி தமிழ் சினிமாவில் கலக்கி வரும் யோகி பாபு, விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சாபா நிகழ்ச்சியில் நடித்துள்ளார் என்பது எத்தனை பேருக்கு தெரியும். ஆம், விஜய் டிவியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சியான லொள்ளு சபாவில் துணை நடிகர்களில் ஒருவராக யோகி பாபு நடித்துள்ளார்.