வகுப்பறையில் மயங்கி விழுந்து 2ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு!. விநாயகர் ஊர்வலத்தில் ஒலித்த டிஜே சத்தத்தால் நிகழ்ந்த விபரீதம்!. அதிர்ச்சி வீடியோ!.

Class 2 girl dies

உத்தரப் பிரதேச மாநிலம் பல்ராம்பூரில், விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தின் போது ஒலிக்கப்பட்ட அதிகப்படியான டிஜே இசையின் சத்தம் தாங்காமல், வகுப்பறையில் 7 வயது சிறுமி மயங்கி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


நடந்தது என்ன? பல்ராம்பூர் நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்த 7 வயது சிறுமி வைஷ்ணவி, செப்டம்பர் 21-ம் தேதி வழக்கம்போல் வகுப்பறையில் அமர்ந்திருந்தார். அப்போது, பள்ளியின் அருகே விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் சென்று கொண்டிருந்தது.

ஊர்வலத்தில் மிக அதிக சத்தத்துடன் டிஜே இசை ஒலிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த அதிகப்படியான சத்தத்தால் அதிர்ச்சியடைந்த வைஷ்ணவி, திடீரென தனது இருக்கையிலேயே மயங்கி விழுந்து சுயநினைவை இழந்தார் என உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள், உடனடியாக சிறுமியை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், சிறுமி ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். சிறுமி மயங்கி விழும் சிசிடிவி காட்சிகளும் தற்போது வெளியாகியுள்ளன.

டிஜே சத்தத்தால் மரணமா? சமூக வலைத்தளங்களில் சிறுமியின் மரணத்திற்கு டிஜே சத்தமே காரணம் எனப் பரவி வரும் தகவலை பல்ராம்பூர் காவல்துறை இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறுகையில், “செப்டம்பர் 21-ம் தேதி சிறுமி வகுப்பறையில் மயங்கி விழுந்து, மருத்துவமனையில் உயிரிழந்தது உண்மைதான். ஆனால் அதற்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இந்தச் சம்பவம் குறித்து சிறுமியின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் எந்தப் புகாரும் அளிக்கவில்லை. மேலும், எந்தவொரு சட்ட ரீதியான நடவடிக்கையும் தங்களுக்கு வேண்டாம் எனக் கூறி, சிறுமியின் உடலைத் தகனம் செய்துவிட்டனர். இருந்தாலும், பள்ளியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகிறோம்” என்று தெரிவித்தனர்.

சிறுமியின் துயர மரணத்தைத் தொடர்ந்து, நகர சபை அரங்கில் சமூக மற்றும் மத அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் அவசரக் கூட்டமொன்று நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில், இனி வரும் காலங்களில் ஊரில் நடக்கும் எந்தவொரு பண்டிகைக்கும் டிஜே பயன்படுத்தக் கூடாது என ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது.

நகர சபை தலைவர் டாக்டர் திரேந்திர பிரதாப் சிங் சிறுமியின் மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். மேலும், டிஜேக்களுக்கு முழுமையான தடை விதிக்கக் கோரி, நகர சபை மற்றும் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து முறையிட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

1newsnationuser5

Next Post

சீரகத்தை இப்படி எடுத்துக்கிட்டா உடல் எடை குறையுமா?.. தெரிஞ்சிக்க வேண்டிய முக்கிய தகவல்கள்!

Wed Sep 23 , 2026
சமையலறையில் அன்றாடம் பயன்படுத்தும் சீரகத்தை பெரும்பாலும் உணவுக்கு மணமும் சுவையும் சேர்க்கும் ஒரு மசாலாப் பொருளாகவே பார்க்கிறோம். காய்கறி உணவுகள் முதல் மோர், ரைத்தா, சட்னி உள்ளிட்ட பல்வேறு உணவுகளில் சீரகம் இடம்பெறுகிறது. ஆனால், உணவின் சுவையை அதிகரிப்பதைத் தாண்டி சீரகத்தில் உடலுக்கு தேவையான சில ஊட்டச்சத்துகளும் தாவரச் சேர்மங்களும் உள்ளன. சீரகத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட் தன்மை கொண்ட சேர்மங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக, இதில் உள்ள வைட்டமின் E சருமத்தைப் பாதுகாக்கும் […]
Jeera Water Benefits 11zon

You May Like